ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட மத்திய அரசுப் பணியிடங்களுக்கு தேர்வு அறிவிப்பு- யுபிஎஸ்சி

மத்திய அரசுப் பணிகளான ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்பட 24 வகையான இந்திய குடிமையியல் பதவிகளுக்கு மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் சிவில் சர்வீசஸ் தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசுப் பணிகளான ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்பட 24 வகையான இந்திய குடிமையியல் பதவிகளுக்கு மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் சிவில் சர்வீசஸ் தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட மத்திய அரசுப் பணியிடங்களுக்கு தேர்வு அறிவிப்பு- யுபிஎஸ்சி

மத்திய அரசின் அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் ஐஏஎஸ், ஐபிஎஸ் என மொத்தம் 24 விதமான பணிகளுக்கு சிவில் சர்வீசஸ் தேர்வு நடத்தப்படவுள்ளது. தற்போது 2019 ஆம் ஆண்டுக்கான தேர்வில், 896 குடிமையியல் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம்

மேலாண்மை : மத்திய அரசு

மொத்த காலியிடங்கள் : 896

வயதுவரம்பு :

  • 01.08.2019 தேதியின்படி 21 முதல் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
  • எஸ்சி, எஸ்டி, ஓபிசி மற்றும் மாற்றுத்திறனாளி பிரிவு விண்ணப்பதாரர்களுககு மத்திய அரசின் விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு உண்டு

கல்வித் தகுதி : ஏதேனும் ஓர் பிரிவில் இளங்கலைப் பட்டம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். இறுதியாண்டு தேர்வு எழுதவுள்ளவர்களும், தேர்வு முடிவுக்காக காத்திருப்பவர்களும் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.

தேர்வு முறை :

எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு இரண்டு கட்டங்களாக நடத்தப்பட உள்ளன. இதன் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

முதல்நிலைத் தேர்வு

முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு இரண்டாம் கட்ட தேர்வு நடத்தப்படும். பின்னர் நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

தேர்வு மையம் : தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி மற்றும் புதுச்சேரி

விண்ணப்பக் கட்டணம் :

ரூ.100. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.

எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள், பெண்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்த தேவையில்லை.

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ள இளைஞர்கள் www.upsconline.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 18.03.2019

இப்பணியிடம் குறித்த மெலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://upsc.gov.in/sites/default/files/Final_Notice_CSPE_2019_N.pdf என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
UPSC Prelims Registration 2019 Started for 896 Civil Services
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X