யூபிஎஸ்யின் இன்ஜினியரிங் வேலைக்கான அறிவிப்பு !!

Posted By:

யூபிஎஸ்சியின் இன்ஜினியரிங் பதவிக்கான துணை இயக்குநர் , ஸ்பெஷலிஸ்ட் கிரேடு II அஸிஸ்டெண்ட் புரோஃபஸர், அஸிஸ்டெண்ட் எக்ஸிகியூட்டிவ் இன்ஜினியர் மற்றும் டிரில்லர் இன் ஜார்ஜ் , விரிவுரையாளர் போன்ற பணிக்கான காலிப்பணியிடம் நிரப்ப அறிவிக்கப் பட்டுள்ளது .

யூபிஎஸ்சி வேலைவாய்ப்பு பொறியாளர்களுக்கான நல்ல வாய்ப்பாகும்

யூபிஎஸ்சியின் பொறியாளர் பணிக்கு விண்ணப்பிக்க இறுதிநாள் ஆகஸ்ட் 31 ஆம் நாள் இறுதிநாள் ஆகும் . யூபிஎஸ்சி விண்ணப்பிக்க செப்டம்பர் 1 ஆம் நாள் பிரிண்டிங் செய்ய இறுதிநாள் ஆகும் . யூபிஎஸ்சியின் பணிக்கு விண்ணப்பிக்க கட்டணமாக ரூபாய் 25 செலுத்தினால் போதுமானது ஆகும் . பெண்கள் மற்றும் எஸ்டி, எஸ்சி பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

வயது வரம்பு :

இந்தியா முழுவதும் பணியிடம் கொண்ட வேலைவாய்ப்பு விண்ணப்பிக்க வயது வரம்பானது அஸிஸ்டெண்ட் டைரக்டர் பணிக்கு 38 வயது இருக்க வேண்டும். அஸிஸ்டெண்ட் இன்ஜினியர் பதவிக்கு 30 முதல் 33 வரை வயது வரம்பு மற்றும் ஸ்பெஷலிஸ்ட் அஸிஸ்டெண்ட் புரோஃபஸர் பதவிக்கு 40 வயதும் , அஸிஸ்டெண்ட் இன்ஜினியர் பதவிக்கு 35 வயதும் இருக்க வேண்டும் . டிரில்லர் பணிக்கு 30 , லெக்சரர் பதவிக்கு 35 வயதும் இருக்க வேண்டும் . மொத்தம் 53 காலிப்பணியிடங்கள் கொண்ட பணிக்கு தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம்.

யூபிஎஸ்சியின் பணியில் சம்பளமாக ரூபாய் 15,600 முதல் 39,100 உடன் கிரேடு பே வழங்கப்படுகிறது .

கல்வித்தகுதி :

யூபிஎஸ்சியின் அஸிஸ்டெண்ட் டைரக்டர் பதவிக்கு கெமிஸ்ட்ரி , ஆர்கானிக் கெமிஸ்ட்ரி முடித்திருக்க வேண்டும் . அஸிஸ்டெண்ட் இன்ஜினியர் பதவிக்கு இன்ஜினியரிங் படித்திருக்க வேண்டும் . ஸ்பெஷலிஸ்ட் கிரேடு 2 பதவிக்கு அங்கிகரிக்கப்பட்ட பல்கலைகழகத்தில் எம்பிபிஎஸ் முடித்திருக்க வேண்டும் . அஸிஸ்டெண்ட் எக்ஸிகியூட்டிவ் இன்ஜினியரிங் பதவிக்கு டிரில்லிங், மெக்கானிக்கல், சிவில் இன்ஜினியரிங் படித்திருக்க வேண்டும் . லெக்சரர் பணிக்கு குறிப்பிட்ட இன்ஜினியரிங முடித்திருக்க வேண்டும் . விருப்பமுடையோர் விண்ணப்பிக்க அதிகாரபூர்வத் தளமான யூபிஎஸ்சியில் https://upsconline.nic.in/ora/VacancyNoticePub.php விண்ணப்பிக்கலாம் . தேர்வு மற்றும் நேரடிதேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப் படுவார்கள்.

சார்ந்த பதிவுகள் :

இந்தியன் ஆர்மியில் பணியாற்ற யூபிஎஸ்சி நடத்தும் சிடிஎஸ் II தேர்வுக்கான அறிவிப்பு

இந்திய வான்படையில் வேலைவாய்ப்பு பெற விண்ணப்பிக்க தயாராகுங்க

யுனைடெட் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு பெற விண்ணப்பிக்கவும் 

English summary
here article tell about job notification of upsc for engineering post

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia