இந்திய ராணுவத்தில் பணியாற்ற ஆசையா? யுபிஎஸ்சி அழைப்பு!

இந்திய ராணுவத்தின் துணை ராணுவப் படையான பிஎஸ்எப், சிஆர்பிஎப், சிஎஸ்ஐஎப், ஐடிபிபி, எஸ்எஸ்பி உள்ளிட்ட பிரிவில் காலியாக உள்ள கமாண்டென்ட் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

By Saba

இந்திய ராணுவத்தின் துணை ராணுவப் படையான பிஎஸ்எப், சிஆர்பிஎப், சிஎஸ்ஐஎப், ஐடிபிபி, எஸ்எஸ்பி உள்ளிட்ட பிரிவில் காலியாக உள்ள கமாண்டென்ட் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) சார்பில் இப்பணியிடங்களுக்கான ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். மொத்தம் 323 உதவி கமாண்டென்ட் பணியிடங்கள் உள்ள நிலையில் இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

இந்திய ராணுவத்தில் பணியாற்ற ஆசையா? யுபிஎஸ்சி அழைப்பு!

நிர்வாகம் : இந்திய இராணுவம்

தேர்வு வாரியம் : மத்திய அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் (யுபிஎஸ்சி)

பணி : உதவி கமாண்டென்ட்

மொத்த காலிப் பணியிடங்கள் : 323

கல்வித் தகுதி : ஏதேனும் ஓர் துறையில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு :

  • 01.08.2019 தேதியின்படி 20 முதல் 25 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
  • அரசு ஆணை மற்றும் விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும்.

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு, தனித்திறன் தேர்வு மற்றும் மருத்துவ பரிசோதனை தேர்வுகள் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

எழுத்துத் தேர்வானது தாள் - I, தாள் - II என இரு தாள்கள் கொண்டது. எழுத்துத் தேர்வில் ஒவ்வொரு தவறான பதிலுக்கும் மதிப்பெண்கள் குறைக்கப்படும்.

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி : 18.08.2019

எழுத்துத் தேர்வு நடைபெறும் மையங்கள் : சென்னை மற்றும் மதுரை.

விண்ணப்பக் கட்டணம் : ரூ.200. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி மற்றும் பெண் விண்ணப்பத்தாரர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை.

விண்ணப்பிக்கும் முறை :

www.upsconline.nic.in என்னும் இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பித்த பின்னர் எதிர்கால பயன்பாட்டிற்காக அதனை பிரிண்ட் அவுட்ட எடுத்து கைவசம் வைத்துக்கொள்ளவும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 20.05.2019 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இப்பணிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.upsconline.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்த்து தெரிந்து கொள்ளவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
UPSC CAPF 2019 Notification for Assistant Commandant, Apply Online till 20 May upsconline.nic.in
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+