மத்திய அரசில் மார்க்கெட்டிங் அதிகாரி பணி!

Posted By: Kani

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி)யில், காலியாக உள்ள பல்வேறு பணிகளுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: மார்க்கெட்டிங் அதிகாரி (குரூப் ஏ)

காலியிடம்: 28

சம்பளம்: ரூ.44,900

வயது வரம்பு: 30 வயதுக்குள் இருக்க வேண்டும். எஸ்சி,எஸ்டி பிரிவினருக்கு அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வு உண்டு.

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்திலிருந்து வேளாண்மை, தாவரவியல், வேளாண் பொருளாதாரம், வேளாண் விற்பனை, பொருளாதாரம் ஏதேனும் ஒன்றில் முதுநிலைப்பட்டம் பெற்றிருக்க வேண்டும். அல்லது அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தில் இருந்து மார்கெட்டிங் துறையில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

அனுபவம்: வேளாண் விற்பனைப்பிரிவில் 2 ஆண்டு அனுபவம்.

விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் upsonline.nic.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 17-05-2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

English summary
UPSC-2018 invites applications for marketing officer (Group-I)

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia