மத்திய அரசின் பொதுத்துறையை சேர்ந்த யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன. தகுதியும், விருப்பமும் உள்ள நபர்களிடமிருந்து இந்த காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கூடுதல் விவரங்களுக்கு uiic.co.in என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.
யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் என்று அழைக்கப்படும் ஐக்கிய இந்தியா காப்பீட்டு நிறுவனம் (United India Insurance Company) என்பது ஓர் இந்திய முன்னணி பொது காப்பீட்டு நிறுவனமாக சீரிய முறையில் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் முழுக்க முழுக்க இந்திய அரசுக்கு சொந்தமானது ஆகும். இந்தியாவின் தமிழ்நாட்டிலுள்ள சென்னையை தலைமையிடமாகக் கொண்டு இந்நிறுவனம் செயல்படுகிறது.
இந்நிறுவனம் 1938 ஆம் ஆண்டு பிப்ரவரி 18 ஆம் தேதி இணைக்கப்பட்டு 1972 ஆம் ஆண்டு தேசியமயமாக்கப்பட்டது. ஒட்டு மொத்தமாக இந்நிறுவனத்தில் 17,361 பணியாளர்கள் பல்வேறு நிலைகளில் பணிபிரிந்து வருகிறார்கள்.

இக்காப்பீட்டு நிறுவனம் முன்னதாக இந்திய பொதுக் காப்பீட்டுக் கழகத்தின் துணை நிறுவனமாக இருந்தது.1999 -ம் ஆண்டின் இந்தியக் காப்பீடு ஒழுங்காற்று மற்றும் வளர்ச்சி முகமை எனப்படும் ஐ.ஆர்.டி.ஏ சட்டத்தின் படி பொதுக்காப்பீட்டு நிறுவனம் மறு காப்பீட்டு நிறுவனமாக மாறியது. இதன் நான்கு முதன்மை காப்பீட்டு துணை நிறுவனங்களான நியூ இந்தியா உறுதிதிட்டம், ஐக்கிய இந்தியா காப்பீடு, கிழக்கத்திய காப்பீடு மற்றும் தேசிய காப்பீடு போன்ற நிறுவனங்கள் தன்னாட்சி அதிகாரம் பெற்றன.
பன்னிரண்டு இந்திய காப்பீட்டு நிறுவனங்கள், நான்கு கூட்டுறவு காப்பீட்டு சங்கங்கள் மற்றும் ஐந்து வெளிநாட்டு காப்பீட்டாளர்கள் இந்திய இயக்கங்கள் மற்றும் இந்திய ஆயுள் காப்பீட்டு கழகத்தின் தென் மண்டல அமைப்புகளுடன் சேர்த்து ஐக்கிய இந்தியா காப்பீட்டு நிறுவனக் குழுமத்துடன் இணைத்து இந்த நிறுவனத்தை உருவாக்கின.
தேசிய மயமாக்கப்பட்ட பின்னர் இந்தியாவில் 17,361 என்ற எண்ணிக்கையில் ஊழியர்கள் இருந்தனர். 2248 அலுவலகங்கள் நாடு முழுவதும் பரவிக்கிடந்தன. 10 மில்லியனுக்கும் அதிகமான காப்பீட்டு சந்தாதார்ர்களுக்கு ஆயுள் காப்பீட்டு வசதியை இவ்வலுவலகங்கள் வழங்கி சேவைபுரிந்தன. பல்வேறு வகையான காப்பீட்டு வகைகளும் இதில் உள்ளடங்கும்.
ஐக்கிய இந்தியா காப்பீட்டு நிறுவனம் பல்வேறு வகையான சிக்கலான காப்பீட்டு திட்டங்களை அதிகமான வாடிக்கையாளர்களுக்காக வடிவமைத்து செயல்படுத்துவதில் முன்னணியில் உள்ளது. எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகம், ராஜீவ் காந்தி பன்னாட்டு விமான நிலைய நிறுவனம், ஹைதராபாத், மும்பை பன்னாட்டு விமான நிலைய நிறுவனம், திருமலை- திருப்பதி தேவஸ்தானம், கொச்சி மெட்ரோ ரயில் நிறுவனம் போன்ற நிறுவனங்களில் இத்திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தற்போது இந்த பெருமைமிகு யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தில் அசிஸ்டென்ட் பிரிவில் தமிழகத்தில் 78, கர்நாடகாவில் 32, கேரளாவில் 30, மகாராஷ்டிராவில் 23, ராஜஸ்தானில் 21, மத்திய பிரதேசத்தில் 10 காலியிடங்கள் உட்பட மொத்தம் 300 பணி இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி:
இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்வதற்கு ஏதாவது ஒரு பிரிவில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். மேலும் விண்ணப்பிக்கும் மாநில மொழியில் பேச, எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
வயதுத்தகுதி:
இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்வதற்கு 30.9.2023 தேதியின் அடிப்படையில் 21 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகையும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
தேர்ச்சி முறை:
இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்யும் நபர்கள் ஆன்லைன் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு மையம்:
இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்யும் மனுதாரர்களுக்குத் தேர்வுகள் சென்னை, மதுரை, கோவை, திருச்சி, திருநெல்வேலி, நாகர்கோவில் உட்பட 23 நகரங்களில் நடைபெற உள்ளன.
விண்ணப்பிக்கும் முறை:
இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்ய ஆன்லைன் முறையை மட்டுமே தேர்வு செய்ய முடியும்.
விண்ணப்பக்கட்டணம்:
இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்ப கட்டணம் ரூ. 1,000 செலுத்த வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் ரூ. 250 மட்டும் செலுத்தினால் போதுமானது.
கடைசி நாள்:
இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்வதற்கு வரும் ஜனவரி 6-ம் தேதி (6.1.2024) கடைசி நாளாகும்.
கூடுதல் விவரங்களுக்கு uiic.co.in என்ற இணையதள முகவரியை கிளிக் செய்து அறிந்துகொள்ளலாம்.


Click it and Unblock the Notifications












