மத்திய அரசின் ஆதார் துறையின் கீழ் செயல்பட்டு வரும் யுஐடிஏஐ(UIDAI) நிறுவனத்தில் டெபுடி டைரக்டர் உள்ளிட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை அனுப்பலாம். கூடுதல் விவரங்களுக்கு
https://uidai.gov.in/en/about-uidai/work-with-uidai/current-vacancies.html என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.
இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யுஐடிஏஐ-UIDAI) இந்தியாவில் வாழும் அனைத்து குடிமக்களுக்கும் "ஆதார்" என்று பெயரிடப்பட்ட ஒரு தனித்துவ அடையாள எண் (UID) வழங்குவது என்ற நோக்குடன் உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பால் வழங்கப்படும் ஆதார் எண் இரட்டைப் பதிவு மற்றும் போலி அடையாளங்களை நீக்கும் அளவுக்கு வலிமையாக இருக்க வேண்டும், எளிமையாகவும், குறைந்த செலவிலும் சரிபார்க்கும் வகையிலும் இருக்க வேண்டும் என்பதும் இதன் நோக்கங்களில் ஒன்றாகும்.
அண்மைய நிலவரப்படி இந்தியாவின் குடிமக்கள் 128.99 கோடி பேருக்கு, ஆணையம் ஆதார் எண்ணை யுஐடிஏஐ வழங்கியுள்ளது.

2016 ஆம் ஆண்டின் ஆதார் சட்டப்படி, ஆதாரின் வாழ்க்கை சுழற்சியில் அனைத்து நிலைகளிலும் இயக்குதல் மற்றும் மேலாண்மை செய்தல் உட்பட ஆதார் பதிவு மற்றும் சரிபார்ப்பு, தனிநபர்களுக்கு ஆதார் எண்களை வழங்குதல் மற்றும் சரிபார்ப்புகளை மேற்கொள்வதற்கான கொள்கைகள், நடைமுறைகள் மற்றும் அமைப்பு முறையை உருவாக்குவது ஆகியவற்றுக்கு இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் பொறுப்பு ஆகும். அதுமட்டுமின்றி, தனிநபர்களின் அடையாளத் தகவல்கள் மற்றும் சரிபார்ப்பு ஆவணங்களை உறுதி செய்வதும் ஆணையத்தின் பணியாகும்.
இந்த பெருமைமிகு ஆதார் துறையின் கீழ் செயல்படும் யுஐடிஐஏ நிறுவனத்தில்தான் தற்போது டெபுடி டைரக்டர், செக்சன் ஆபீஸர், அசிஸ்டென்ட்ஸ் செக்சன் ஆபீஸர் ஆகிய பணியிடங்கள் (Deputy Director, Section Officer, Assistant Accounts Officer, Assistant Section Officer) காலியாக உள்ளன.இப்பணிகளுக்கு தகுதியான நபர்கள் டெபுடேஷன் (Deputation) முறைப்படி தேர்வு செய்யப்பட உள்ளனர்.
டெபுடி டைரக்டர் உட்பட 11 பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் Degree, Diploma, MBA, CA ஆகிய படிப்புகளில் ஏதேனும் ஒன்றை முடித்தவராக இருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் அரசு நிறுவனங்கள், UT / பொது நிறுவனங்கள் போன்றவற்றில் பணி சார்ந்த துறைகளில் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ஊதிய அளவுகளின் கீழ்வரும் சமமான பதவிகளில் 3 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரை அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.
இந்த UIDAI நிறுவன பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 56 வயதுக்கு மேற்படாதவராக இருக்க வேண்டும்.
இப்பணிகளுக்கு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது Pay Matrix Level - 05/ 06 / 08 / 11 என்ற ஊதிய அளவுகளின்படி, ரூ.12,520/- முதல் ரூ.2,00,000/- வரை மாத சம்பளமாக பெறுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த UIDAI நிறுவன பணிகளுக்கு தகுதியான நபர்கள் Deputation முறைப்படி தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆர்வமும், தகுதியும் உள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு வரும் பிப்ரவரி 6-ம் தேதிக்குள் (06.02.2024) அன்றுக்குள் தபாலில் அனுப்பித் தரவேண்டும்.
கூடுதல் விவரங்களுக்கு
https://uidai.gov.in/en/about-uidai/work-with-uidai/current-vacancies.html என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.


Click it and Unblock the Notifications












