திறன் வளர்ப்பு படிப்புகள் தொடங்க விண்ணப்பங்கள் வரவேற்பு: யுஜிசி

நடப்பு கல்வியாண்டில் (2020-21) பல்கலைக் கழகங்கள் மற்றும் கல்லூரிகளிடம் இருந்து திறன் வளர்ப்பு படிப்புகள் தொடங்குவதவற்கு விண்ணப்பஙகள் வரவேற்கப்படுவதாக யுஜிசி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

 
திறன் வளர்ப்பு படிப்புகள் தொடங்க விண்ணப்பங்கள் வரவேற்பு: யுஜிசி

National Skills Qualifications Framework (NSQF) எனும் தேசிய திறன் தகுதி கட்டமைப்பின் கீழ் திறன் வளரப்பு படிப்புகளுக்கான நெறிமுறைகளை யுஜிசி மாற்றி அமைத்துள்ளது. அதில், திறன் வளர்ப்பில் சான்றிதழ் படிப்பு, டிப்ளமோ, முதுநிலை டிப்ளமோ, பி.வோக், எம்.வோக் மற்றும் ஆராய்ச்சி படிப்பு ஆகியவற்றை அறிமுகம் செய்தது.

இதனைத் தொடர்ந்து, தற்போது 2020-21 கல்வியாண்டில் புதிதாக திறன் வளர்ப்பு படிப்புகளை தொடங்குவதற்கு பல்கலைக்கழகம், கல்லூரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக யுஜிசி அறிவித்துள்ளது. புதிய நெறிமுறைகளின்படி, திறன் வளர்ப்பு படிப்புகளை தொடங்கும் கல்வி நிறுவனங்கள் யுஜிசியின் நிதியுதவி பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, மேற்கண்ட திறன் வளர்ப்பு படிப்புகளை வழங்குவதற்கு ஆர்வம் உள்ள கல்வி நிறுவனங்கள் வரும் ஜூன் 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் எனவும், முழுமையான விவரங்களுக்கு யுஜிசி.,யின் அதிகாரப்பூர்வ இணையதளத்தைக் காணவும் யுஜிசி அறிவித்துள்ளது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
UGC invites application for skill-based courses
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X