தமிழகத்தின் திருச்சி மாவட்ட அரசு மருத்துவமனையில் காலியாக உள்ள மருந்தாளுநர்கள், ஆய்வக நுட்புநர்கள், நுண்கதிர் வீச்சாளர்கள் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 45 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் ரூ.12 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : அரசு மருத்துவமனை, திருச்சி
மேலாண்மை : தமிழக அரசு
பணி : மருந்தாளுநர்கள், ஆய்வக நுட்புநர்கள், நுண்கதிர் வீச்சாளர்கள்
மொத்த காலிப் பணியிடங்கள் : 45
கல்வித் தகுதி : விண்ணப்பதாரர் அரசு மற்றும் மருத்துவ கவுன்சில் அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் எம்பிபிஎஸ் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஊதியம் : மாதம் ரூ.12,000 வரையில் ஊதியம் வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் 26.07.2021 தேதிக்குள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தங்களது விண்ணப்பப் படிவம் கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :
இணை இயக்குநர்,
மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் அலுவலகம்,
எண்4, வ.ஊ.சி. சாலை, ரோஷன் மஹால் அருகில்,
மத்திய பேருந்து நிலையம் பின்புறம்,
திருச்சி - 620001.
தேர்வு முறை : விண்ணப்பதாரர் நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர். நேர்காணல் 29.07.2021 தேதியன்று நடைபெறும்.


Click it and Unblock the Notifications












