திருச்சி மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஊராட்சி ஒன்றியங்களில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் (Office Assistant) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வந்துள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு tiruchirappalli.nic.in என்ற இணையதள முகவரியைக் கிளிக் செய்து அறியலாம்.
அந்தநல்லூர், லால்குடி,மணிகண்டம், மண்ணச்சநல்லூர், மருங்காபுரி, முசிறி, தொட்டியம், திருவெறும்பூா், துறையூா், உப்புலியபுரம், வையம்பட்டி ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் இந்த காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

பணியின் தன்மை:
அலுவலகத்தில் பணிபுரியும் உயர் அலுவலர்களுக்கு அடிப்படை பணிகளை மேற்கொள்வதில் உதவி செய்தல் மற்றும் அலுவலக நடைமுறை பணிகளில் உதவி செய்தல் வேண்டும்.
ஊதியம்:
படி நிலை ரூ. 15700 - ரூ. 50000 என்ற அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும்.
வயது வரம்பு:
01. 07.2023 அன்று 18 - 32 வயதுக்குள் இருக்க வேண்டும். இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வழக்கமான தளர்வு அளிக்கப்படும். நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் பட்டியல் கண்ட சாதிகள்/ பட்டியல் கண்ட பழங்குடி வகுப்பினர் 5 ஆண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் இரண்டு ஆண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது..
விண்ணப்பப் படிவம்:
1 அந்தநல்லூர்
2 லால்குடி
3 மணிகண்டம்
4 மண்ணச்சநல்லூர்
5 மருங்காபுரி
6 முசிறி
7 தொட்டியம்
8 திருவெறும்பூா்
9 துறையூா்
10 உப்புலியபுரம்
11 வையம்பட்டி ஆகிய இடங்களில் பணியிடங்கள் காலியாக உள்ளன.
அடிப்படைத் தகுதிகள்:
8ம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்; மிதிவண்டி ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.
இப்பணியிடங்களுக்கானன விண்ணப்பப் படிவத்தினை
tiruchirappalli.nic.in என்ற இணையதளம் அல்லது தேசிய தொழில்நெறி வழிகாட்டு மையஇணையதளம் (National Career Service Portal) www.ncs.gov.in ஆகியவற்றில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இணையதள முகவரி:
கூடுதல் விவரங்களுக்கு tiruchirappalli.nic.in என்ற இணையதள முகவரியைக் கிளிக் செய்து அறியலாம்.


Click it and Unblock the Notifications












