தமிழக காவல் துறையில் காலியாக உள்ள 202 காவல் உதவி ஆய்வாளர் பணியில் ஃபிங்கர் பிரிண்ட் பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் வெளியிட்டுள்ளது. இதற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

பணி மற்றும் காலிப் பணியிடங்கள் விபரம்:-
பணி : உதவி ஆய்வாளர் - ஃபிங்கர் பிரிண்ட்
காலியிடங்கள் : 202
ஊதியம் : ரூ.36,900 முதல் ரூ.116600 வரை.
கல்வித் தகுதி : பி.இ, பி.டெக், பி.எஸ்சி.
- (ஏதேனும் அறிவியல் சார்ந்த துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்)
வயது வரம்பு : 20 வயது முதல் 28 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
உடல் தகுதி : ஆண்கள் குறைந்தது 163 செ.மீ உயரமும், பெண்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்கள் 154 செ.மீ. உயரமும் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை : தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.tnusrbonline.org என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 2018 செப்டம்பர் 28
தேர்வு செய்யப்படும் முறை : எழுத்துத்தேர்வு, உடற்தகுதித் தேர்வு, நேர்முகத் தேர்வு மூலமாக விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணி குறித்த மேலும் விபரங்கள் மற்றும் விண்ணப்பிக்க http://www.tnusrbonline.org/SI_Fingerprint_Notification.pdf அல்லது http://www.tnusrbonline.org/ லிங்கை கிளிக் செய்து அறிந்து கொள்ளவும்.


Click it and Unblock the Notifications












