'போலீஸ்' என்றால் பயம் கலந்த மரியாதை, அனைவரிடத்திலும் இருக்கும். மரியாதையும், அவமரியாதையும் கிடைக்கும் ஒரே துறை எது என்றால், அது 'காவல்துறை' தான். இருந்தாலும், அந்த துறையில் சேருவதே கனவாக கொண்டிருக்கும் இளைஞர் பட்டாளம் அதிகம் என்பதை மறப்பதற்கு இல்லை. ஓகே விஷயத்துக்கு வாங்கனு; நீங்க கேட்டது காதில் விழுந்துச்சு...!
காவல்துறை, சிறை மற்றும் சீர்திருத்தத்துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறைகளில், இரண்டாம் நிலை காவலர், ஜெயில் வார்டன், தீயணைப்பு வீரர் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என, தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. மொத்தமுள்ள 3,552 பணியிடங்களில், ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிர்வாகம் : தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம்(Tnusrb)
மேலாண்மை : மத்திய அரசு
பணி விவரம்
காவல்துறை
· இரண்டாம் நிலைக் காவலர்(மாவட்ட, மாநகர ஆயுதப்படை)
· இரண்டாம் நிலைக் காவலர்(தமிழ்நாடு சிறப்புக் காவல் படை)
சிறை மற்றும் சீர்திருத்தத் துறை
· இரண்டாம் நிலை சிறைக் காவலர்
தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை
· தீயணைப்பாளர்
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்.
விண்ணப்பிக்க கடைசி தேதி - 15.08.2022
பணியிடங்கள் எண்ணிக்கை: 3552
கல்வி தகுதி
குறைந்தபட்சம் 10ம் வகுப்பு/SSLC தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு
விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு 01.07.2022 நாளன்று, 18 வயதை பூர்த்தி செய்திருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பிற்கான தளர்வுகள் குறித்த தகவல்களை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வாயிலாக அறிந்து கொள்ள முடியும்.

விண்ணப்ப கட்டணம்
தேர்வு கட்டணமாக ரூ.250 வசூலிக்கப்படும். விண்ணப்பதாரர்கள் கட்டணத்தை ஆன்லைன் வாயிலாக மட்டுமே செலுத்த வேண்டும்.
தேர்வு முறை
எழுத்துத் தேர்வு, உடற்கூறு அளத்தல், உடற்தகுதித் தேர்வு, உடல் திறன் போட்டிகள், சிறப்பு மதிப்பெண்கள் ஆகிய நடைமுறைகளில், தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை
விண்ணப்பதாரர்கள் www.tnusrb.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
ஏனைய இதர வழிகளில் விண்ணப்பித்தால் அவ்விண்ணப்பம் நிராகரிக்கப்படும். இப்பணிகளுக்கு, 15.08.2022ம் தேதிக்குள் பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டும் ஏற்றுக்கொள்ளப்படும். மறக்காதீங்க...!
தமிழ் படிச்சிருந்தா 20 சதவீதம்
மொத்த காலிப் பணியிடங்களில் 20 சதவீதம் பணியிடங்கள், முதலாம் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்பு வரை தமிழ் மொழியை பயிற்று கொண்டு படித்திருக்கும் விண்ணப்பதாரர்களுக்கு தேர்வின் ஒவ்வொரு நிலையிலும் 20 சதவீதம் முன்னுரிமை வழங்கப்படும்.

ரொம்ப முக்கியம் யூத்ஸ்
2022 அரசு விதிமுறைகளின் படி, இந்த எழுத்துத் தேர்வில் முதன் முறையாக தமிழ் மொழி தகுதித்தேர்வு நடத்தப்படும்.
இதில், குறைந்தபட்சம் 40% மதிப்பெண்கள் பெற்று தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களுடைய முதன்மை எழுத்துத் தேர்வின் OMR விடைதாள்கள் மட்டுமே மதிப்பீடு செய்யப்படும்.
வாய்ப்பை தவற விடக்கூடாதுனா...! ஒரு முறை கிளிக் பண்ணுங்க...!


Click it and Unblock the Notifications












