இரண்டாம் நிலை காவலருக்கு ரூ.67,100 மாதம் ஊதியம்...?

காவல்துறை, சிறை மற்றும் சீர்திருத்தத்துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறைகளில், இரண்டாம் நிலை காவலர், ஜெயில் வார்டன், தீயணைப்பு வீரர் ஆகிய பதவிகளில், காலியாக உள்ள 3359 பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என, தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

நிர்வாகம் : தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம்(Tnusrb)

மேலாண்மை : மத்திய அரசு

பணி விவரம்

காவல்துறை

· இரண்டாம் நிலைக் காவலர்(மாவட்ட, மாநகர ஆயுதப்படை)

· இரண்டாம் நிலைக் காவலர்(தமிழ்நாடு சிறப்புக் காவல் படை)

சிறை மற்றும் சீர்திருத்தத் துறை

· இரண்டாம் நிலை சிறைக் காவலர்

தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை

· தீயணைப்பாளர்

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்.

அறிவிக்கை வெளியான தேதி: 08.08.2023

விண்ணப்பிக்க கடைசி தேதி - 17.09.2023

பணியிடங்கள் எண்ணிக்கை: 3359

போலீஸ் ஆகனும்? வாய்ப்பு காத்திருக்கு...!

கல்வி தகுதி

குறைந்தபட்சம் 10ம் வகுப்பு/SSLC தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது அதற்கு இணையான கல்வி தகுதியை பெற்றிருத்தல் அவசியம் ஆகும். பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாமல், அதற்கு மேற்பட்ட கல்வி தகுதியினை பெற்றிருந்தாலும், அந்த விண்ணப்பங்கள் விண்ணப்பிக்க தகுதியற்றவர்கள் ஆவர்.

வயது வரம்பு

விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு 01.07.2023 நாளன்று, 18 வயதை பூர்த்தி செய்திருக்க வேண்டும். அதிகபட்சம் 26 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் அவசியம். 01.07.1997 லிருந்து 01.07.2005 க்குள் பிறந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு தளர்வுகள் குறித்த தகவல்களை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வாயிலாக அறிந்து கொள்ள முடியும்.

சிறப்பு ஒதுக்கீடுகள்

மொத்த காலிப் பணியிடங்களில் இருந்து அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டு போட்டிகளில்‌ கலந்து கொண்டவர்களுக்கு 10 சதவீதமும்(336 பணியிடங்கள்), சார்ந்துள்ள வாரிசுதாரர்களுக்கு 10 சதவீதமும்(336 பணியிடங்கள்), முன்னாள்‌ ராணுவத்தினருக்கு 5 சதவீதமும், ஆதரவற்ற விதவைகளுக்கு 3 சதவீதமும் ஒதுக்கப்படும்‌.

விண்ணப்ப கட்டணம்

தேர்வு கட்டணமாக ரூ.250 வசூலிக்கப்படும். விண்ணப்பதாரர்கள் கட்டணத்தை ஆன்லைன் வாயிலாக மட்டுமே செலுத்த வேண்டும்.

தேர்வு முறை

எழுத்துத் தேர்வு, உடற்கூறு அளத்தல், உடற்தகுதித் தேர்வு, உடல் திறன் போட்டிகள், சிறப்பு மதிப்பெண்கள் ஆகிய நடைமுறைகளில், தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவர். மொத்த 100 மதிப்பெண்களுக்கு, இத்தேர்வுகள் நடைபெறும்.

போலீஸ் ஆகனும்? வாய்ப்பு காத்திருக்கு...!

விண்ணப்பிக்கும் முறை

விண்ணப்பதாரர்கள் www.tnusrb.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

ஏனைய இதர வழிகளில் விண்ணப்பித்தால் அவ்விண்ணப்பம் நிராகரிக்கப்படும். இப்பணிகளுக்கு, 17.09.2023ம் தேதிக்குள் பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டும் ஏற்றுக்கொள்ளப்படும். மறக்காதீங்க...!

தமிழ் படிச்சிருந்தா 20 சதவீதம்

மொத்த காலிப் பணியிடங்களில் 20 சதவீதம் பணியிடங்கள், முதலாம் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்பு வரை தமிழ் மொழியை பயிற்று கொண்டு படித்திருக்கும் விண்ணப்பதாரர்களுக்கு தேர்வின் ஒவ்வொரு நிலையிலும் 20 சதவீதம் முன்னுரிமை வழங்கப்படும்.

ரொம்ப முக்கியம் யூத்ஸ்

குறைந்தபட்சம் 40% மதிப்பெண்கள் பெற்று தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களுடைய முதன்மை எழுத்துத் தேர்வின் OMR விடைதாள்கள் மட்டுமே மதிப்பீடு செய்யப்படும்.

அதாவது, எழுத்துத் தேர்வு - 70 மதிப்பெண்கள், தமிழ் மொழி தகுதித் தேர்வும் உண்டு. குறைந்தபட்சம் 40 சதவீத மதிப்பெண்களைப் பெற வேண்டும். அதன்பின் எழுத்துத் தேர்வு நடைபெறும். உடல் தகுதித் தேர்வு - 24 மதிப்பெண்கள்

சிறப்புத் தேர்வு - 6 மதிப்பெண்கள்.

வாய்ப்பை தவற விடக்கூடாதுனா...! ஒரு முறை கிளிக் பண்ணுங்க...!

https://www.tnusrb.tn.gov.in/index.php

TNUSRB Notification - 2023 பற்றிய பொது நிபந்தனைகள், முழு விவரங்களையும் கவனமாக படிக்க வேண்டுமா?

chrome-extension://efaidnbmnnnibpcajpcglclefindmkaj/https://www.tnusrb.tn.gov.in/pdfs/InformationBrochureCR2023.pdf

chrome-extension://efaidnbmnnnibpcajpcglclefindmkaj/https://www.tnusrb.tn.gov.in/pdfs/NotificationCR2023.pdf

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
The Tamil Nadu Uniformed Staff Selection Board has released the notification for the posts of Second Constable, Jail Warden, Fireman. Eligible and interested candidates can apply online from August 18.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+