தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் காலியாக உள்ள தொழில் பழகுநர் பயிற்சிக்கான பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
இது குறித்து அரசுப் போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:-
திருச்சிராப்பள்ளி மாவட்டம் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கும்பகோணம்) லிட்., கும்பகோணம் ஒத்துழைப்புடன் தொழில்பழகுநர் பயிற்சி வாரியம் (தென் மண்டலம்) இணைந்து இணையதளம் மூலமாக தகுதியான பொறியியல் பட்டம் மற்றும் பட்டயப்படிப்பு (இயந்திரவியல், தானியங்கியவியல்) 2017, 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் தேர்ச்சி பெற்ற தமிழக மாணவர்களிடம் இருந்து, ஒரு வருட தொழில் பயிற்சிக்காக தொழிற்பயிற்சி சட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் இணையதளம் வழியாக வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்தான விபரங்களுக்கு http://boat-srp.com News & Events Coulmn என்னும் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தைக் காணவும்.
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 21.10.2019 ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அரசுப் போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குநர் பொன்முடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.