TNSTC Apprenticeship training 2022: போக்குவரத்து துறையில் மாத ஊதியத்துடன் தொழிற்பழகுநர் பயிற்சி...!

மெக்கானிக்கல், ஆட்டோமொபைல் பிரிவு பொறியியல் துறையை சேர்ந்த மாணவர்களுக்கு, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மாத ஊதியத்துடன் தொழில்பழகுநர் பயிற்சியை வழங்க திட்டமிட்டுள்ளது.

தகுதி மற்றும் ஆர்வமுள்ள மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

நிர்வாகம் : தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம்( TAMIL NADU State Transport Corporation Limited)

மேலாண்மை : மாநில அரசு

 போக்குவரத்து துறையில் 346 இளைஞர்களுக்கு பயிற்சி...!

பணி விவரம்

· Graduate Apprentices (Grade-I)

· Technician (Diploma) Apprentices(Grade-II)

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பிக்க கடைசி தேதி - 18.12.2022

பணியிடங்கள் எண்ணிக்கை: 346

கல்வித்தகுதி

கிரேட்-I பிரிவிற்கு ( Graduate Apprentices) 2020, 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில், அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் முழு நேர பொறியியல் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

கிரேட்-II டெக்னீசியன் பிரிவுக்கு விண்ணப்பிக்க பொறியியல் அல்லது தொழில்நுட்ப பொறியியல் துறையில் டிப்ளமோ படித்திருக்க வேண்டும். முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருத்தல் அவசியம்

வயது வரம்பு

விண்ணப்பதாரர் 1973 ஆம் ஆண்டு Apprenticeship Rules இன்படி, வயது வரம்பு முறை பின்பற்றப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

 போக்குவரத்து துறையில் 346 இளைஞர்களுக்கு பயிற்சி...!

உதவித்தொகை விபரம்

மெக்கானிகல் இன்ஜீனியரிங், ஆட்டோமொபைல் இன்ஜீனியரிங் - ரூ. 9000

டிப்ளமோ - கிரேடு-II மெக்கானிகல் இன்ஜீனியரிங்/ ஆட்டோமொபைல் இன்ஜீனியரிங் - ரூ.8000

கோட்டங்கள் வாரியாக பணியிடங்கள் எண்ணிக்கை விவரம்

TNSTC விழுப்புரம் - 96

TNSTC கும்பகோணம் - 83

TNSTC மதுரை - 26

TNSTC சேலம் - 29

TNSTC திண்டுக்கல் - 23

TNSTC தருமபுரி - 23

TNSTC விருதுநகர் - 22

SETC சென்னை - 44

நோட் இட் ப்ளீஸ்...!

· ஏற்கனவே அரசு சார்ந்த தொழிற்பயிற்சி மேற்கொண்டவர்கள் மறுமுறை மீண்டும் இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்கக்கூடாது.

· ஓராண்டு காலம் பயிற்சி வழங்கப்படும்.

· தொழிற்பயிற்சிக்கு மாணவர்கள் கல்வியில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர்

· விண்ணப்பதார்களில் தகுதியான மாணவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்புக்கான அறிவிப்பு வெளியாகும்.

· மாணவர்கள் http://www.mhrdnats.gov.in/ என்ற இணையத்தளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். புதிதாக விண்ணப்பிக்கும் மாணவர்கள் ENROLL செய்து விண்ணப்பிக்க வேண்டும். ஏற்கனவே, ENROLL செய்தவர்கள் LOGIN செய்து விண்ணப்பிக்கலாம்.

கல்வித்தகுதி, வயதுவரம்பு. நிபந்தனைகள் மற்றும் இதர விவரங்கள், விண்ணப்பப்படிவம் மற்றும் நிபந்தனைகளை அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது அறிவிப்பில் இருந்து அறிந்து கொள்ளவும்.

தெரிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் பட்டியல் டிசம்பர் 23இல் அதிகாரப்பூர்வ தளத்தில் வெளியிடப்படும். அதிகாரப்பூர்வ இணைய தள முகவரி http://www.boat-srp.com

மிஸ் பண்ணிடாதீங்க...! கிளிக் பண்ணுங்க...!

chrome-extension://efaidnbmnnnibpcajpcglclefindmkaj/http://boat-srp.com/wp-content/uploads/2022/11/TNSTC-All_Regions-Notification_2022-23.pdf

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Apprenticeship Training Scheme 2022: The Tamil Nadu State Transport Corporation, known as TNSDC, has issued a notification to provide vocational training with monthly stipend to engineering and diploma graduates.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X