எட்டாம் வகுப்பு படிச்சிருந்தா போதும்?

தமிழ்நாடு தகவல் ஆணையத்தின் பணி, ஆணையம் உருவாக்கப்பட்டதின் நோக்கம் குறித்து, நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்னு சொல்லுங்க பார்ப்போம்...!

 

ஓகே தெரியும்னா பரவாயில்லை... அப்படி தெரியலைனா உடனே போய் அதுகுறித்து தெரிந்து கொள்ளுங்கள்...! சரி விஷயத்துக்கு வர்றேன். அதாவது, மேலே சொன்ன ஆணையம் பணி குறித்து விவரங்களை தெரிஞ்சுக்கிட்டீங்கனா...!

தேர்வு இல்லாமல் வேலைங்கோ...!

அப்ப அங்க நீங்க பணி புரிய விண்ணப்பிக்க தயார்? ஆமாங்க, தேர்வு இல்லாமல் நேரடி நியமனம் வாயிலாக, ஐந்து அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என, தமிழ்நாடு தகவல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தேர்வின்றி நியமனம் செய்யப்படும் இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் உடனே ஆன்லைனில் விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து, கீழே உள்ள முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

 

நிர்வாகம்: தமிழ்நாடு தகவல் ஆணையம் (State Information Commission)

மேலாண்மை: மாநில அரசு

பணி விவரம்: Office Assistant

பணியிடங்கள் எண்ணிக்கை: 5

தேர்வு செய்யும் முறை: நேர்காணல்

விண்ணப்பிக்கும் முறை: ஆஃப்லைன்

விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி தேதி: 02.09.2022

கல்வி தகுதி

அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில், விண்ணப்பதாரர் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு

அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர் 18 வயது நிரம்பி இருக்க வேண்டும்.

இட ஒதுக்கீடு/ வயது/ ஊதியம் விவரம்

Category ReservationPriority/ Non-Priority Age Limit( As on 01.07.2022),
Scale of Pay
SC - Priority 37
MBC/DNC Destitute Widow, Non-Priority 34 Rs.15700-
BC (Other than BC Muslims) Destitute Widow Non-Priority 34 58,100/-
General Turn - Non-Priority 32 (Level-1)
BC (Other than BC Muslims) - Non-Priority 34

தமிழ்நாடு அரசு அல்லது அரசு சார்ந்த நிறுவனங்களில் பணிபுரிந்தவர்களுக்கு, அந்தந்த பிரிவினருக்கு உரிய வயது வரம்பிலிருந்து தளர்வு வழங்கப்படும்.

விண்ணப்பதாரர்கள் சென்னை மாவட்ட எல்லைக்குள் வசிப்பவராக இருத்தல் வேண்டும்.

'www.tnsic.gov.in' என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, அதை பூர்த்தி செய்து தபால் வாயிலாக அனுப்பு வேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி

செயலாளர்,

தமிழ்நாடு தகவல் ஆணையம்,

எண்.19 அரசு பண்ணை இல்லம்,

பேரன்பேட், நந்தனம்,

சென்னை.35.

என்ற முகவரிக்கு 02.09.2022-க்குள் விண்ணப்பங்கள் கிடைக்கும் வகையில், பதிவு தபாலில் அனுப்பப்பட வேண்டும். நியமன நேர்காணலை ஒத்தி வைக்கவோ, நியமன அறிக்கையை எவ்வித முன்னறிவிப்பும் ஒன்றி ரத்து செய்யவோ, சென்னை, தமிழ்நாடு தகவல் ஆணைய செயலாளருக்கு முழு அதிகாரம் உள்ளது. தேவைப்படின் தேர்வர்களுக்கு எழுத்து தேர்வும் நடத்தப்படும் என்றும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூடுதல் விவரங்கள் அறிய வேண்டும்?

அதிகாரப்பூர்வ இணையதளம்

http://www.tnsic.gov.in/

அறிவிப்பாணை விவரம்

https://drive.google.com/file/d/1e1xqDOC3FMhnislyARHq9RZmHp92-_Nf/view

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Tamil Nadu Information Commission invites applications for five vacant posts of Office Assistant.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X