தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் காலியாக உள்ள விவசாய நிபுணர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. வருடம் ரூ.7.20 லட்சம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடத்திற்கு பி.எஸ்சி, எம்.எஸ்சி துறையில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் (TNSDMA)
மேலாண்மை : தமிழக அரசு
பணி : விவசாய நிபுணர் (Agronomy and Crop Production)
கல்வித் தகுதி : பி.எஸ்சி, எம்.எஸ்சி விவசாயத் துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு : விண்ணப்பதாரர் 53 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் : ரூ.7.20 லட்சம் (வருடம்)
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.tnsdma.tn.gov.in எனும் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தினைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து [email protected] எனும் மின்னஞ்சல் முகவரிக்கு கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 19.02.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : பணி அனுபவம் மற்றும் தகுதி அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.tnsdma.tn.gov.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications

