திருப்பூர் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் காலியாக உள்ள சாலை ஆய்வாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் வரும் பிப்ரவரி 22 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

இதுகுறித்து, திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருப்பூர் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் காலியாக உள்ள சாலை ஆய்வாளர் பணியிடங்களை நிரப்பிட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. சாலை ஆய்வாளர் பணி நியமனத்துக்கு விண்ணப்பிக்கத் தேவையான கல்வி மற்றும் இதர தகுதிகள், பணியிடங்களின் விவரங்கள், இன சுழற்சி ஒதுக்கீடு மற்றும் விண்ணப்பப் படிவம் உள்ளிட்ட அனைத்துத் தகவலும் https://cdn.s3waas.gov.in/s3d1f255a373a3cef72e03aa9d980c7eca/uploads/2020/01/2020012773.pdf என்னும் அறிவிப்பு இணையதளத்தில் உள்ளது.
இந்தப்பணியிடத்திற்கான விண்ணப்பங்களை மேற்குறிப்பிட்டள்ள இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன், உரிய சான்றுகளின் நகல்களை இணைத்து மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளா்ச்சிப்பிரிவு)-க்கு அலுவலக வேலை நாட்களில் காலை 10 முதல் மாலை 5.45 மணி வரை நேரிலோ அல்லது மாவட்ட ஆட்சித்தலைவா் (வளர்ச்சி பிரிவு), மாவட்ட ஆட்சியரகம், (அறை எண்: 310), பல்லடம் ரோடு, திருப்பூா் என்னும் முகவரிக்கு பதிவஞ்சல் மூலமாகவோ வரும் பிப்ரவரி 22 ஆம் தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications












