திருப்பூரில் ரூ.50 ஆயிரத்தில் உதவியாளர் பணி..!

திருப்பூர் மாவட்டம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகின் வெள்ளக்கோவில் ஊராட்சி ஒன்றியத்தில், அலுவலக உதவியாளர், ஜீப் ஓட்டுநர், இரவு காவலர் பணிக்கு, 26.12.2023 க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என, மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

நிர்வாகம் : ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை(Rural Development and Panchayat Raj Department)

மேலாண்மை : மாநில அரசு

காலிப்பணியிடம் மாவட்டம்: திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவில்

ஓட்டுநர் பணிக்கு ரூ.62 ஆயிரம்...!

பணி விவரம் :

Ø அலுவலக உதவியாளர் (Officer Assistant)

Ø இரவு காவலர் (Watchmen)

Ø ஈப்பு ஓட்டுநர் (Jeep Driver)

விண்ணப்பிக்கும் முறை: ஆஃப்லைன்

விண்ணப்பிக்க கடைசி தேதி - 26.12.2023

கல்வி தகுதி:

அலுவலக உதவியாளர் பணிக்கு, எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மிதி வண்டி ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்.

இரவு காவலர் பணிக்கு, எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

ஜீப் ஒட்டுநர் பணிக்கு, 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மோட்டார் வாகனச் சட்டம் 1988 (மத்திய சட்டம் 59/1986)-இன் படி, தமிழக அரசின் தகுந்த அதிகாரியால் வழங்கப்பட்ட தகுதியான ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.

ஐந்தாண்டுகளுக்கு குறைவில்லாமல் மோட்டார் வாகனங்களை ஓட்டியமைக்கான நடைமுறை அனுபவம் கொண்டவராக இருக்க வேண்டும்.

ஊதியம்:

அலுவலக உதவியாளர் பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு ஊதிய நிலை-1 இன் கீழ், மாத ஊதியமாக, ரூ.15,700 முதல் ரூ.50,000 வரை வழங்கப்படும். இதர படிகளும் அரசு விதிகளுக்கு உட்பட்டு வழங்கப்படும்.

இரவு காவலர் பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு ஊதிய நிலை-1 இன் கீழ், மாத ஊதியமாக, ரூ.15,700 முதல் ரூ.50,000 வரை வழங்கப்படும்.இதர படிகளும் அரசு விதிகளுக்கு உட்பட்டு வழங்கப்படும்.

ஜீப் ஓட்டுநர் பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு ஊதிய நிலை-8 இன் கீழ், மாத ஊதியமாக, ரூ.19,500 முதல் ரூ.62,000 வரை வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை/ நிபந்தனைகள்:

Ø தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்தினை https://tiruppur.nic.in/ இணையதளத்திலும், தேசிய நெறிவழிகாட்டு மைய இணையதளத்திலும் (National Career Service Portal) WWW.ncs.gov.in உள்ள விண்ணப்பப்படிவத்தினை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அனுப்பப்பட வேண்டும்.

Ø இனசுழற்சி, வயது மற்றும் கல்வித் தகுதியற்ற நபர்களிடமிருந்து வரப்பெறும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

Ø விண்ணப்பதாரர் காலி பணியிடம் அறிவிக்கப்பட்ட மாவட்டத்திற்குள் வசிப்பவராக இருக்க வேண்டும்.

Ø அரசு விதிகளின்படி இனசுழற்சி முறை பின்பற்றி நியமனங்கள் மேற்கொள்ளப்படும்.

Ø தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத்தேர்வு நடைபெறும் இடம் மற்றும் தேதி குறித்து நேர்காணல் கடிதம் (Call letter) அனுப்பி வைக்கப்படும்.

Ø காலிப்பணியிடங்கள் குறித்த விவரங்கள், விண்ணப்ப படிவம், https://tiruppur.nic.in/notice_category/recruitment/ என்ற மாவட்ட இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

Ø பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 26.12.2023 மாலை 5.45 மணி வரை அனுப்பலாம். காலதாமதமாக பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. விண்ணப்பங்களை நேரிலோ அல்லது அஞ்சல் வாயிலாக அனுப்பலாம்.

விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 18 வயதையும், 01.07.2023 அன்று அதிகபட்ச வயதை எட்டாமல் இருக்க வேண்டும்.

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:

ஆணையாளர்,

ஊராட்சி ஒன்றியம்,

வெள்ளகோவில்.

என்ற முகவரியில் அஞ்சல் வாயிலாகவோ அல்லது நேரிலோ அனுப்ப வேண்டும்.

கூடுதல் விபரங்களை அலுவலக முகவரிக்கு நேரில் சென்றோ அல்லது அதிகாரப்பூர்வ தொலைபேசி வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

கிளிக் ப்ளீஸ் ஆல் டீடைல் யூ வில் கெட்...!

https://tiruppur.nic.in/notice_category/recruitment/

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
In Tirupur District, Rural Development and Panchayat Unit, Vellakoil Panchayat Union, Office Assistant, Jeep Driver Vacancy, Eligible persons should apply before 26th December. Applicants must be a resident of the notified district.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+