தமிழக அரசின் சென்னை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர்கள் பணியிடங்களை நிரப்பிட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 12 காலிப் பணியிடம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, சென்னை
மேலாண்மை : தமிழக அரசு
மொத்த காலியிடங்கள் : 12
பணி : அலுவலக உதவியாளர்
கல்வித் தகுதி : 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு : 01.07.2019 தேதியின்படி 18 முதல் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் : மாதம் ரூ.15,700 முதல் ரூ.50,000 வரையில்
விண்ணப்பிக்கும் முறை : http://www.tnrd.gov.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி : இயக்குநர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்ககம், 4வது தளம், பனகல் மாளிகை, சைதாப்பேட்டை, சென்னை - 15
தேர்வு முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசி தேதி : 2019 மார்ச் 08
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://www.tnrd.gov.in அல்லது https://www.tnrd.gov.in/pdf/OA_advertisement.pdf என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.