தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் காலியாக உள்ள ஓட்டுநர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 2 காலிப் பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு 8-வது தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை - நாகப்பட்டினம்
மேலாண்மை : தமிழக அரசு
பணி : ஓட்டுநர்
மொத்த காலிப் பணியிடம் : 02
கல்வித் தகுதி :
- 8-வது தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
- தமிழ்நாடு மோட்டார் வாகனச் சட்டம் 1986-யின் படி உரிய அலுவலரால் ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
- 5 ஆண்டுகள் குறையாத முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
01.07.2019-யின் படி வயது வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, பொதுப் பிரிவினர் 18 முதல் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பிரிவினர் 18 முதல் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் : மேற்கண்ட பணியிடத்திற்கு ரூ.19,500 முதல் ரூ.62,000 வரையில் ஊதியம் வழங்கப்படும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
இணைய முகவரி : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் https://www.nagapattinam.nic.in/ என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
பூர்த்தி செய்யப்பட்டு விண்ணப்பத்தினை உரிய சான்றுகளுடன் இணைத்து அறை எண் - 119, முதல் தளம், மாவட்ட ஆட்சியரகம் (வளர்ச்சி) பிரிவில் அலுவலக வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 10.03.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : தகுதி பட்டியல் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.nagapattinam.nic.in/ என்னும் இணையதளம் அல்லது மேலே குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காணவும்.