தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காலியாக உள்ள ஓட்டுநர் மற்றும் அலுவலக உதவியாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 9 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு 8-வது தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, கிருஷ்ணகிரி (TNRD)
மேலாண்மை : தமிழக அரசு
மொத்த காலிப் பணியிடம் : 09
பணி மற்றும் காலிப் பணியிட விபரங்கள்:
- ஓட்டுநர் - 06
- அலுவலக உதவியாளர் - 03
கல்வித் தகுதி : 8-வது தேர்ச்சி பெற்றவர்கள் மேற்குறிப்பிட்டுள்ள இரண்டு பணியிடங்களுக்கும் விண்ணப்பிக்கலாம்.
ஓட்டுநர் பணியிடத்திற்கு விண்ணப்பிப்போர் செல்லத்தக்க ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும். குறைந்தது 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு : 18 முதல் 40 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
(அரசு விதிமுறைப்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வ அறிவைப்பைக் காணவும்.)
ஊதியம் :
ஓட்டுநர் - ரூ.19,500 முதல் ரூ.62,000 வரையில் ஊதியம் வழங்கப்படும்.
அலுவலக உதவியாளர் - ரூ.15,700 முதல் ரூ.50,000 வரையில்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் https://Krishnagiri.nic.in/ என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பப் படிவத்தினைப் பெற்று அதனைப் பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி),
ஆறை எண்- 58, முதல் தளம்,
மாவட்ட ஆட்சியரகம், கிருஷ்ணகிரி
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 02.03.2019 தேதிக்குள் கிடைக்குமாறு விண்ணப்பிக்க வேண்டு.
தேர்வு முறை : தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் மற்றும் தேதி குறித்த நேர்காணல் கடிதம் தனியே அனுப்பி வைக்கப்படும்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் மேலே குறிப்பிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












