தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறைக்கு உட்பட்டு கரூர் மாவட்டத்தில் காலியாக உள்ள அஅலுவலக உதவியாளர், பதிவறை எழுத்தர், ஓட்டுநர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 17 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணிகளுக்கு ரூ.62 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை- கரூர்
மேலாண்மை : தமிழக அரசு
பணி மற்றும் காலிப் பணியிட விபரங்கள் :
- அலுவலக உதவியாளர் - 10
- பதிவறை எழுத்தர் - 03
- ஈப்பு ஓட்டுநர் - 04
மொத்த காலிப் பணியிடங்கள் : 17
கல்வித் தகுதி :
8, 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், நான்கு சக்கர வாகன ஓட்டுநர் உரிமம் உள்ளவர்கள் மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு :
- விண்ணப்பதாரர் 18 முதல் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
- அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
ஊதியம் :
அலுவலக உதவியாளர் - ரூ.15,700 முதல் ரூ.50,000 வரையில்
பதிவறை எழுத்தர் - ரூ.15,900 முதல் ரூ.50,400 வரையில்
ஈப்பு ஓட்டுநர் - ரூ.19,500 முதல் ரூ.62,000 வரையில்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://Karur.nic.in/ என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு 10.02.2021 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 10.02.2021 தேதிக்குள் விண்ணப்பம் கிடைக்கும் வகையில் அனுப்ப வேண்டும்.
தேர்வு முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://Karur.nic.in/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












