திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியங்களில் கிளார்க் வேலை
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல், குஜிலியம்பாறை, வடமதுரை, வேடசந்தூர், தொப்பம்பட்டி, ஒட்டன்சத்திரம் ஆகிய ஊராட்சி ஒன்றியத்தில், காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என, அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நிர்வாகம் : ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை(Rural Development and Panchayat Raj Department)

மேலாண்மை : மாநில அரசு
காலிப்பணியிடம் மாவட்டம்: திண்டுக்கல்
பணி விவரம்
கொடைக்கானல் ஊராட்சி ஒன்றியம்
அலுவலக உதவியாளர் - 4
குஜிலியம்பாறை ஊராட்சி ஒன்றியம்
அலுவலக உதவியாளர் -3இரவுக்காவலர் - 1
வடமதுரை ஊராட்சி ஒன்றியம்
இரவுக்காவலர் - 1
வேடசந்தூர் ஊராட்சி ஒன்றியம்
அலுவலக உதவியாளர் 3
தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியம்
அலுவலக உதவியாளர் - 2
இரவுக்காவலர் -1
ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியம்
அலுவலக உதவியாளர் - 2
விண்ணப்பிக்கும் முறை: ஆஃப்லைன்
விண்ணப்பிக்க கடைசி தேதி - 12.10.2022
காலிப்பணியிடம் : 2
கல்வி தகுதி
அலுவலக உதவியாளர்
எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்; மிதிவண்டி ஓட்ட தெரிந்தவராக இருக்க வேண்டும்.
இரவுக்காவலர்
எழுத படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
ஊதியம்
அலுவலக உதவியாளர் : ரூ.15,700-ரூ.50,000
இரவுக்காவலர் : ரூ.15,700 -ரூ.50,000

விண்ணப்பிக்கும் முறை/ நிபந்தனைகள்
விண்ணாப்பதாரர்கள் கல்வித்தகுதி, இருப்பிடம், சாதிச்சான்று, முன்னுரிமை சான்று ஆகியவைகளுக்கு ஆதாரம் கண்டிப்பாக இணைக்கப்பட வேண்டும்.
இனசுழற்சி, வயது மற்றும் கல்வித் தகுதியற்ற நபர்களிடமிருந்து வரப்பெறும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
ஒவ்வொரு பணியிடத்திற்கும் தகுதியின் அடிப்படையில் தனித்தனியே விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பதாரர் காலி பணியிடம் அறிவிக்கப்பட்ட மாவட்டத்திற்குள் வசிப்பவராக இருக்க வேண்டும்.
அரசு விதிகளின்படி இனசுழற்சி முறை பின்பற்றி நியமனங்கள் மேற்கொள்ளப்படும்.
சுயமுகவரியுடன் கூடிய அஞ்சல் வில்லை ரூ.30/- ஒட்டப்பட்ட அஞ்சல் உறை -1 (10x4 Inches Postal Cover) இணைத்து அனுப்பப்பட வேண்டும்.
தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத்தேர்வு நடைபெறும் இடம் மற்றும் தேதி குறித்து நேர்காணல் கடிதம் (Call letter) அனுப்பி வைக்கப்படும்.
காலிப்பணியிடங்கள் குறித்த விவரங்கள், விண்ணப்ப படிவம், தேசிய தொழில் நெறி வழிகாட்டு மைய இணையதள (National Career Service Portal) www.ncs.gov.in மற்றும் dindigul.nic.in என்ற மாவட்ட இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 14.10.2022 பிற்பகல் 5.45 மணிக்குள் ஆணையாளர், தொடர்புடைய ஊராட்சி ஒன்றியம் முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமோ அனுப்ப வேண்டும். காலதாமதமாக பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.


Click it and Unblock the Notifications












