விண்ணப்பித்துவிட்டீர்களா..? கோவையில் ஊராட்சி செயலர் பணியிடங்கள்!

Posted By: Kani

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் நிரப்பப்பட உள்ள ஊராட்சி செயலாளர் பணியிடங்களுக்கு வரும் 11-04-2018 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடம்: 27

பணியிடம்: கோயம்புத்தூர்  

பணி: ஊராட்சி செயலாளர்

1. தாலம்பாளையம்
2. பிட்சனூர்
3. அக்ரஹரசமாளம்
4. கள்ளிப்பாளையம்
5. நரசிம்மர்
6. ராமநாதலிபுதுர்
7. தாத்தூர்
8. பொட்டியையண்டிபுரம்பு
9. கோலர்பட்டி
10. கபுலிபாலயம்
11. கல்லிட்டி
12. என். சந்திரபுரம்
13. ரசிச்சட்டி பாளம்
14. ஆர் பொன்னபுரம்
15. சேவகரன் பாலயம்
16. தால்வாபாளையம்
17. கோலர்பட்டி
18. கூலனிகிபட்டி
19. எஸ். நல்லூர்
20. எஸ். மலையாண்டிபட்டிணம்
21. தொண்டமுத்தூர்
22. விரால்பட்டி
23. வடகூர்
24. பெடம்பள்ளி
25. அப்பனைக்கன்பட்டி
26. ஜே. கிருஷ்ணபுரம்
27. பப்பாம்பட்டி

கல்வித்தகுதி: 10 ம் வகுப்பு முடித்திருக்க வேண்டும் 

குறிப்பு: விண்ணப்பதாரர் காலியிடம் அறிவிக்கப்பட்ட ஊராட்சி  பகுதிக்குள் வசிக்க வேண்டும்

வயது வரம்பு: பொதுப்பிரிவினர் - 18 வயது பூர்த்தி  அடைந்தும் 30  வயதிற்கு மிகாமல் இருக்கவேண்டும். ஆதிதிராவிடர் -பழங்குடியினர்-மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (மற்றும் சீர்மரபினர்) பிற்படுத்தப்பட்டோர் - 18 வயது பூர்த்தி  அடைந்தும் 35 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

சம்பளம்: குறைந்த பட்சம் ரூ.7700 மற்றும் அனுமதிக்கப்பட்ட படிகள் வழங்கப்படும். 

தேர்வு செய்யப்படும் முறை: தகுதியான விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டு திறன் தேர்வு நடத்தப்படு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத்தேர்வு நடைபெறும் இடம், தேதி குறித்து நேர்காணல் கடிதம் அனுப்பி வைக்கப்படும்.

நிபந்தனைகள்:

1. விண்ணப்பதாரர்கள் கல்வித்தகுதி, இருப்பிடம், சாதிச்சான்று, முன்னுரிமை சான்று ஆகியவைகளுக்கு ஆதாரம் கண்டிப்பாக  இணைக்கப்பட வேண்டும் .

2. இனசுழற்சி, வயது, கல்வி தகுதியற்ற நபர்களிடமிருந்து வரும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

 
3. ஒவ்வொரு கிராம ஊராட்சிப் பணியிடத்திற்கும் தகுதியின் அடிப்படையில்  தனித்தனியே விண்ணப்பிக்க வேண்டும்.

4. விண்ணப்பதாரர் காலியிடம் அறிவிக்கப்பட்ட ஊராட்சிப் பகுதிக்குள் இருக்க வேண்டும்.

5. தகுதியான விண்ணப்பதாரர் சம்பந்தப்பட்ட ஊராட்சியில் காலியிடம் இல்லாத பட்சத்தில் அவ்ஊராட்சியின் எல்லையை ஒட்டிய ஊராட்சியிலிருந்து விண்ணப்பிக்கும் தகுதி வாய்ந்த நபர்கள் பரீசீலனை செய்யப்படுவர்.

6. அரசு விதிகளின் படி இனசுழற்சி முறை பின்பற்றி நியமனங்கள் மேற்கொள்ளப்படும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 11-04-2018

விண்ணப்பிக்க வேண்டிய அஞ்சல் முகவரி:
தனி அலுவலர்/வட்டார வளர்ச்சி அலுவலர் (கிஊ)
கோவை மாவட்டம்.

1.அதிகாரப்பூர்வ தளம்:

அதிகாரப்பூர்வ தளத்தில் பணிக்கான தகவலை பெறலாம். அதிகாரப்பூர்வ தளத்திற்கான லிங்க்

2. அறிவிப்பு லிங்க்:

முகப்பு பக்கத்தில் உள்ள 'லேட்டஸ்ட் நியூஸ்' என்ற பகுதியின் கீழ் உள்ள லிங்கை கிளிக் செய்வதன் மூலம் முழுமையான விவரங்கள் அறிய முடியும்.

3. அறிவிப்பு இணைப்பு:

மேலும் விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு போன்ற முழுமையான விவரங்கள் அறிய இந்தப் பகுதியை கிளிக் செய்யவும்.

4. விண்ணப்பம்:

விண்ணப்பப் படிவத்தில் கூறப்பட்டுள்ள முறையில் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்யவும்.

English summary
TNRD Coimbatore Panchayat Secretaries recruitment Notification 2018

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia