டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வை வெல்ல படியுங்க தேர்வை வெல்லுங்க

Posted By:

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வில் வெற்றி பெற உங்களை நீங்களே வழிநடத்த வேண்டும் மற்றும் வழிநடத்த கற்றுக்கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் வெற்றி என்ற இலக்கை உறுதி செய்ய முடியும். வாழ்வில் சிறந்து  விளங்க முடியும். 

1. சுவஜல் பைலட் புராஜெக்ட் எந்த கிராமத்தில் அறிமுகபடுத்தப்பட்டது?

1. பிகம்புரா கரௌலி ராஜஸ்தான்
2.  ராஜ்பூர், ராஜஸ்தான்
3. பர்வாலா இன் குஜராத்
விடை: 1 .பிகம்புரா கரௌலி ராஜஸ்தான்
விளக்கம்
: ராஜஸ்தான் கிராமத்தில் நான்கு நீர்தேக்கம் உருவாக்கப்படும்ல். கிராமத்தின் பொதுவான குழாய் உருவாக்கப்படும். பொதுகுழாய் நீர் 300 வீடுகளுக்கு நீர் வழங்கலாம்.

2. உலகின் தனித்து வளர்ந்து நிற்கும் இர்ராடி டால்பின்கள் எந்த மாநிலத்தில் உள்ளது ?

1 ராஜஸ்தான்
2 ஒடிசா
3 தெலுங்கானா
விடை: 2. ஒடிசா
விளக்கம்
: ஒடிசாவில் தனித்து இர்ராடி டால்பின்கள் வளர்ந்து நிற்கின்றன. மொத்தம் 155 வகை உயிரினங்கள் கொண்டது இவ்வகை உயிரினங்கள் ஆகும்.

image source 

3. 2வது இந்திய கொரிய மாநாடு எங்கு நடைபெற்றத ?

1. கொரியா
2. சீனா
3. ரஷ்யா
விடை: 1. கொரியா
விளக்கம்
: இந்தியா கொரியா நாடுகளுக்கிடையேயான மாநாடுகள் இரண்டு நடைபெற்றுள்ளது. இந்தியா - கொரியா இடையேயான பொருளாதார உறவினை பலப்படுத்துதல் மேலும் இந்த உறவை வழுப்படுத்த உதவும்

4 . கூகுள் எந்த வங்கியுடன் இணைந்து தேஷ் ஆப் உருவாக்கியது?

1 ஸ்டேட் பேங் ஆப் இந்தியா
2 சென்ரல் பேங் ஆப் இந்தியா
3 இந்தியன் வங்கி
விடை: 1. ஸ்டேட் பேங் ஆப் இந்தியா
விளக்கம்
: கூகுளுடன் இணைந்து ஸ்டேட் பேங் ஆப் இந்தியா மொபைல் மூலம் பண பரிமாற்றம் செய்ய உதவுகின்றது. இந்த கூட்டு ஒப்பந்தம் மூலம் கூகுள் தேஷ் எஸ்பிஐ யுபிஐ ஐடியும் உருவாக்கி பயன்படுத்தலாம். சிறிய பணமாற்றங்களையும் இந்த ஆப் மூலம் பரிமாற்றம் செய்யலாம்.

5. எந்த நாளினை சத்தியாகிரக நாளாக அனுசரிக்க காந்தி உத்திரவிட்டார்?

1. ஆக்ஸ்ட் 30 1920
2. ஏப்ரல் 6,19191
3. ஆக்ஸ்ட் 1 1920
விடை: 2. ஏப்ரல்6, 1919
விளக்கம்
: ரௌலட் சட்டத்தை காந்தி முழுமூச்சுடன் எதிர்த்தார்.1919 மார்ச் மாதம் பம்பாயில் சத்தியாகிரக சபை தோற்றுவிக்கப்பட்டது. 1919 மார்ச் 30 சத்தியாகிரக நாளாக அனுசரிக்க காந்திஜி மக்களை கேடுக்கொண்டார். ஆனால் காந்தி சென்னை சென்றபொழுது ராஜாஜிபோன்றோரின் ஆலோசனையின்பேரில் சத்யாகிரக நாள் 1919 ஏப்ரல் 6ம் தேதி மாற்றப்பட்டு கொண்டாடப்பட்டது.

Image Source

6. ரௌலட் சட்டம் இயற்றப்பட்டது எப்பொழுது?

1.  மார்ச் 1919 மார்ச் 18
2. ஏப்ரல் 20, 1919
3. மார்ச் 1920, மார்ச் 20
விடை: 1. மார்ச் 1919 மார்ச் 18
விளக்கம்
: உலகப் போர் முடிந்தவுடன் பயங்கரவாதத்தை அடக்கும் முயற்சியில் நீதிபதி சிட்னி ரௌலட் என்பாரின் பரிந்துரையின்படி 1919 மார்ச் 18 சட்டம் இயற்றப்பட்டது.

7. எந்த வட்ட மேஜை மாநாட்டில் காநிதியை அரைநிர்வாணப் பக்கிரி என கூறினார்கள்?

1. முதல் வட்ட மேஜை மாநாடு
2. இரண்டாம் வட்ட மேஜை மாநாடு
3. மூன்றாம் வட்ட மேஜை மாநாடு

விடை: 2. இரண்டாம் வட்ட மேஜை மாநாடு
விளக்கம் : காந்தி இர்வின் ஒப்பந்தந்தை அடுத்து 2வது வட்ட மேஜை மாநாட்டில் காந்திஜி கலந்து கொண்டார். 1931 , லண்டனில் செப்டம்பர் 7இல் தொடங்கியது. சிறுபான்மையினோரின் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் குறித்து பிரதானமாக விவாதிக்கப்பட்டது.

8. எந்தவிதி குழந்தைகள் தொழிலகங்களில் பணியமர்த்தலை தடுக்கின்றது ?

1. சட்டவிதி 24
2. சட்டவிதி18
3. சட்டவிதி 21
விடை: 1. சட்டவிதி 24
விளக்கம் :
14 வயதுகுட்ப்பட்ட குழந்தைகளை தீங்கு விளைவிக்க கூடிய பணிகளில் பணியமர்த்துதலை தடை செய்வதே விதி 24 ஆகும்
இந்த நடவடிக்கை குழந்தைகளின் வாழ்விலும் நலனிலும் பாதுகாப்பிலும் அக்கறை கொள்கிறது.Image Source

9. சட்டவிதி 40 எந்த நடைமுறை குறித்து பேசுகின்றது?

1. கிராம பஞ்சாயத்து
2. மாவட்ட நிர்வாகம்
3. நகரம்
விடை: 1.கிராம பஞ்சாயத்து
விளக்கம்
: கிராமத்துக்கான பஞ்சாய்த்துகளை அமைத்தல் குறித்து இது பேசுகின்றது. கிராம நிர்வாகம் குறித்து இந்தியா 1970களில் சிந்திக்க தொடங்கி அது தொடர்பாக கமிட்டிகளை உண்டாக்கி விவாதித்து செயல்படுத்தி வருகின்றது.

10. இந்தியாவின் அதிவேக செயல்திறன் கொண்ட கணினி எது ?

1. சூப்பர் சானிக்
2. பிரதியுஷ்
3. ஆகாஷ்
விடை: 2. பிரதியுஷ்
விளக்கம்
:
இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை அமைச்சகம் சார்பில் நாட்டில் புதிய கம்பியூட்டர் எனப்படும் மீத்திறன் கணினி உருவாக்கி பொதுபயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. Image Source

சார்ந்த பதிவுகள்:

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கான கேள்வி பதில்கள் படிங்க தேர்வை வெல்லுங்க

English summary
The article tells about question paper for Tnpsc

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia