தலைமை செயலகத்தில் நிருபர் பணி

உள்ளூர் முதல் உலகை புரட்டி போடும் நிகழ்வுகளை, துணிச்சலாக பதிவு செய்வது பத்திரிகை நிருபரின் பணி. கணினி யுகத்தில், நொடியில் தகவல் பரிமாறும் தொழில்நுட்ப வசதிகள் இன்று வந்துவிட்டன.
நொடியில் ஒரு செய்தியை பரிமாறுவது எளிது. இந்த வசதிகள் இல்லாத காலத்திலும் மிகவும் சிரமத்துடன் பகிரப்பட்ட செய்திகள், இன்றும் தகவலாகவும், விரும்பியும் வாசிக்கப்படுகின்றன.

விரல் விட்டு எண்ணும் வகையில் இருந்த ஊடகங்கள், பத்திரிகையில், இன்று பன்மடங்கு பெருகிவிட்டது. குறிப்பாக, ஆன்லைன் ஊடகங்கள் எண்ணிக்கையை அளவிடுவது என்பது சற்று நேரம் எடுக்கும் என்றே கூற வேண்டும். இத்தகைய ஊடகங்களின் தாக்கம் பெரியளவில் இருக்கும் என்பதை மறந்து விடக்கூடாது.

TNPSC நிருபர் வேலை வாய்ப்பு

ஆன்லைன் பத்திரிகைகள், ஊடகங்கள் கோலோச்சி வருவதால், அவர்களுக்கு ஏற்ற வகையில் செய்திகளை விரைவாகவும், நேர்த்தியாகவும் வழங்கும் நிருபர்கள் தேவையும் அதிகரித்துள்ளது.

அந்த வரிசையில், அரசும் மக்களுக்கான திட்டங்கள், செயல்பாடுகள், பேரவை நிகழ்வுகள் ஆகியவற்றை தொகுத்து மக்களுக்கு ஊடகங்கள் வாயிலாக வழங்கும் பணிக்காக, தகுதி, ஆர்வமுள்ள நிருபர்கள் விண்ணப்பிக்கலாம் என, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.

நிர்வாகம் : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(TNPSC)

மேலாண்மை : மாநில அரசு

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

பணியிடம்: சென்னை

பதவி விவரம்

நிருபர்(ஆங்கிலம்)

நிருபர் (தமிழ்)

பணியிடங்கள் எண்ணிக்கை: 9

ஊதியம்: ரூ. 56,100 - 2,05,700 (நிலை-22)

பணியின் பெயர்

தமிழ்நாடு சட்டப்பேரவை தலைமை செயலக பணிகள்

கல்வித் தகுதி

விண்ணப்பதாரர்கள், 13.09.2022 அன்றுபடி கீழே அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் கல்வித் தகுதியினை அல்லது அதற்கு இணையான படிப்பினை பல்கலைக்கழக மானியக் குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் படித்து பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

Tnpsc நிருபர் பணி: முக்கியம் நோட் பண்ணுங்க...!

இணையவழி விண்ணப்பத்தை 12.10.2022 அன்று இரவு 1.59 மணி வரை திருத்த /விண்ணப்பிக்க இயலும். பின், அச்சேவை நிறுத்தப்படும்.

இணையவழி விண்ணப்பத்தை 17.10.2022 - நள்ளிரவு 12.01 மணி முதல் 19.10.2022 இரவு 11.59 மணி வரை திருத்தம் செய்யலாம்.

இணைய வழி விண்ணப்பத்துடன் இணைத்து பதிவேற்றம் செய்த ஆவணங்கள், சான்றிதழ்கள் மாற்ற/ பதிவேற்ற, மீள் பதிவேற்றம் செய்ய 09.12.2022 அன்று இரவு 11.59 மணி வரை விண்ணப்பதாரர்கள் அனுமதிக்கப்படுவர். பின், அச்சேவை நிறுத்தப்படும்.

அறிவிக்கை நாள்: 13.09.2022

இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்குரிய கடைசி நாள்: 12.10.2022

இணையவழி விண்ணப்பத்தை திருத்தம் செய்வதற்கான காலம்

17/10/2022 நள்ளிரவு 12.01 வரை

19/10/2022 இரவு 11.59 வரை

ப்ளீஸ் ஒரு முறை படிக்க...!

காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பதிவுக் கட்டணம் ரூ.150/-, தேர்வு கட்டணம் ரூ 200/- செலுத்த வேண்டும்.

ஊதியம்

நிலை-22 ன்படி ரூ. 56,100 - 2,05,700 மாத ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

TNPSC நிருபர் வேலை வாய்ப்பு

தேர்வு நடைபெறும் நாள்

தாள் -1 பாடத்தாள் (சுருக்கெழுத்து) பட்டயப்படிப்புத்தரம் ஆங்கிலம் (அ) தமிழ்

21.12.2022 முற்பகல் 09.30 மணி முதல் முற்பகல் 11.00 மணி வரை.

தாள் -2 பகுதி -அ கட்டாய தமிழ்மொழி தகுதித் தேர்வு(10ம் வகுப்புத் தரம்) பொது அறிவு (பட்டப்படிப்புத் தரம்)

21.12.2022 பிற்பகல் 02.30 மணி முதல் பிற்பகல் 05.30 வரை

நிபந்தனைகள், வயது வரம்பு சலுகை மற்றும் இதர விவரங்களை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியான அறிவிப்பு வாயிலாக கவனமாக படித்து அறிந்து கொள்ளவும்.

பதவிக்கு ஏற்ற கல்வி தகுதி, அது சார்ந்த ஐயப்பாடுகள் குறித்து எளிதில் புரிய, ஒரு முறை கிளிக் பண்ணுங்க ப்ளீஸ்...!

https://www.tnpsc.gov.in/Tamil/Notification.aspx

பதிவு மற்றும் பதவி, ஊதியம் பற்றிய முழு விவரங்களுக்கு...!

https://www.tnpsc.gov.in/Document/tamil/REPORTER TAMIL.pdf

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
The Tamil Nadu Public Service Selection Commission (TNPSC) has announced to apply for computerized examination for direct appointment in Tamil Nadu Legislative Assembly Chief Secretariat posts, English and Tamil Correspondent posts.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+