குரூப்-4 தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு...!

குரூப்-4 தேர்வர்களே; உங்களுக்கான முக்கிய அறிவிப்பு என்னனு தெரியுமா? இந்நேரம் பாதி பேர் அது என்னனு கண்டுபிடிச்சு இருப்பீங்க...! பரவாயில்லை நானும் சொல்றேன்.

 

டி.என்.பி.எஸ்.சி., குரூப்-4 (TNPSC Group 4) பதவிகளுக்கான எழுத்து தேர்வு, கடந்த ஜுலை 24ம் தேதி நடந்தது. அந்தத் தேர்வை 22 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள், 7 ஆயிரத்துக்கு அதிகமான தேர்வு மையங்களில் தேர்வு எழுதினர்.

முக்கிய அறிவிப்பு உங்களுக்கு...!

இந்தத் தேர்வர்களுக்கு, எழுத்து தேர்வுக்கான உத்தேச விடைகளை டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ளது. தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து தேர்வர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

சரியான விடையைக் கோர விரும்பும் விண்ணப்பதாரர், டிஎன்பிஎஸ்சி இணையத்தளத்தில், பதிவெண், விண்ணப்ப எண், பிறந்த தேதி, தேர்வு பாடத்தின் பெயர், வினா எண் உள்ளிட்ட விவரங்களை அளித்து உத்தேச விடைகளை பெறலாம்.

 
முக்கிய அறிவிப்பு உங்களுக்கு...!

மேல் முறையீடு வாய்ப்பு

இந்த உத்தேச விடைகளில் ஏதேனும் தவறு உள்ளது என்று கருதினால், விண்ணப்பதாரர் மேல்முறையீடு செய்யலாம். வரும் ஆகஸ்ட் 8ம் தேதி மாலை 5.45 மணிக்குள் தேர்வாணைய இணையதளத்தில் உள்ள 'Answer Key Challenge' என்ற சாளரத்தைப் பயன்படுத்தி, முறையீடு செய்ய வேண்டும்.

அதன்பின், இச்சேவை முற்றிலும் நிறுத்தப்படும். ஒருவர் எத்தனை கேள்விகளையும் மறுக்கலாம் என, தேர்வாணையம் தெரிவித்துள்ளது. இருப்பினும், தேர்வு எழுதிய விண்ணப்பதாரர்கள் மட்டுமே இந்த வசதியை கோர முடியும்.

மேலும், உத்தேச விடைகளை மறுத்து தாங்கள் சுட்டிக் காட்டும் சரியான விடைக்கான/விடைகளுக்கான ஆதாரமாக இருக்கும் புத்தகத்தின் விவரங்களை கண்டிப்பாக பதிவு செய்ய வேண்டும்.

அனைத்து கோரிக்கைகளும் ஆன்லைன் மூலமாக மட்டுமே பெறப்படும். அஞ்சல் வழியாகவோ, மின்னஞ்சல் வழியாகவோ பெறப்படாது என்பதை தயவு செய்து கவனத்தில் கொள்ளுங்கள் தேர்வர்களே...!

முக்கிய அறிவிப்பு உங்களுக்கு...!

Answer Key - ஐ எப்படி பார்ப்பது?

· https://www.tnpsc.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.

· முகப்பு பக்கத்தில், whats new என்பதன் கீழ், "COMBINED CIVIL SERVICES EXAMINATION- IV (GROUP-IV SERVICES) (DOE: 24/07/2022) (Tentative Keys)" என்பதனை கிளிக் பண்ணவும்.

· உத்தேச விடைகளைத் தெரிந்து கொள்ள 'GENERAL TAMIL WITH GENERAL STUDIES (Subject Code 003)' என்பதனை கிளிக் பண்ணவும்.

· மேல்முறையீடு செய்ய, KEY - CHALLENGE click here என்ற சாளரத்தை கிளிக் பண்ணுங்க...!

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
The Tamil Nadu Public Service Commission, also known as TNPSC, has released the intended answers for the Group-4 written exam on the official website.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X