டி.என்.பி.எஸ்.சி., என அழைக்கப்படும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், கடந்தாண்டு டிசம்பர் 4,9,11 மற்றும் 27 ஆகிய தேதிகளில் நடத்திய வனத்தொழில் பழகுநர் காலிப் பணியிடங்களுக்கான தேர்வு எழுதியவர்களில், அனுமதிக்கப்பட்ட 30 பேர் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டு உள்ளனர். இவர்களுக்கு, டிசம்பர் 29 ஆம் தேதி நேர்முகத் தேர்வு நடைபெறும் என்றும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆல் தி பெஸ்ட் யூத்ஸ்...! போங்க பாஸ்...! நேர்காணலில் அசத்திவிட்டு வாங்க...
நிர்வாகம்: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைம்(TNPSC)
மேலாண்மை: மாநில அரசு
காலியிடங்கள்: 10

பதவியின் பெயர் - வனத்தொழில் பழகுநர்( Forest Apprentice)
பணியின் பெயர்- தமிழ்நாடு வன சார்நிலை பணி
கடந்தாண்டு செப்டம்பர் 6 ஆம் தேதி, வனத்தொழில் பழகுனர் பதவிக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் என அறிவிக்கப்பட்டது. இப்பதவிகளில் தேர்வாகும் நபர்களுக்கு, சம்பளம்: ரூ.37,700 - ரூ.1,38,500 என நிர்ணயம் செய்யப்பட்டது.
ஆன்லைன் வாயிலாக, முன்கொணரப்பட்ட இரண்டு இடங்கள் சேர்த்து மொத்தம் 10 இடங்களுக்கு விண்ணப்பம் செய்தவர்களில், 2,854 பேர் எழுத்து தேர்வில் பங்கேற்றனர். கடந்தாண்டு டிசம்பர் 4, 9, 11 மற்றும் 27 ஆகிய தேதிகளில் தேர்வு நடைபெற்றது.
கல்வி தகுதி:
அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி, பல்கலைக்கழகங்களில் வனவியல் அல்லது அதற்கு இணையான கல்வியில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்; அல்லது பொறியியல், இயற்பியல்,வேதியியல், தாவரவியல்,விலங்கியல், புள்ளியல், கால்நடை மருத்துவயியல், வனவிலங்கு உயிரியல்,விவசாயம், நிலவியல், தோட்டக்கலை, கடல்சார் உயிரியல் ஆகிய ஏதேனும் ஒரு படிப்புகளில், இளநிலை பட்டத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்திருந்தது.
v எழுத்து தேர்வு, உடற்தகுதி தேர்வு (Walking Test), வாய்மொழி தேர்வு ஆகிய மூன்று நிலைகளில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் இறுதி தகுதி பட்டியல் தயாரிக்கப்படும்.
v வனத்தொழில் பழகுநர் பதவிக்கான நியமனத்திற்கான சிறப்பு விதிகளின்படி, வனவியல் பாடத்தில் பட்டப்படிப்பு படித்துள்ள தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு தெரிவில் முழுமையான முன்னுரிமை வழங்கப்படும்.
v வனவியல் பாடத்தில் பட்டப்படிப்பு படித்துள்ள தகுதியுள்ள விண்ணப்பதாரர் யாரும் இல்லாத நிலையில் மட்டுமே, மீதமுள்ள மற்ற பட்டப்படிப்பு படித்துள்ள தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் பரிசீலிக்கப்படுவர்.
v எழுத்துத் தேர்வில் கலந்து கொண்ட 2,854 தேர்வர்களில் 30 பேர் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு, டிசம்பர் 29ஆம் தேதி நேர்முகத் தேர்வு நடைபெறுகிறது.
v தேர்வர்கள் எழுத்துத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் அத்தெரிவிற்கான அறிவிக்கையில் வெளியிடப்பட்ட பிற விதிகளின் அடிப்படையில் நேர்முக தேர்வுக்கு தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட தேர்வர்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியல் தேர்வாணய இணையதளமான www.tnpsc.gov.in இல் வெளியிடப்பட்டுள்ளது.
அதை ஒரு முறை மறக்காமல் பாருங்க...!
https://www.tnpsc.gov.in/English/press_releases.aspx
https://www.tnpsc.gov.in/Document/PressEnglish/Press Release - 19.12.2023.pdf


Click it and Unblock the Notifications












