டிஎன்பிஎஸ்சி இந்து அறநிலைத்துறை எக்ஸிகியூட்டிவ் பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்

Posted By:

தமிழ்நாடு பணியாளர் தேர்வு வாரியத்தின் கீழ் இந்து சேரிட்டியன் பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு பெற அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

டிஎன்பிஎஸ்சியின் அறநிலைத்துறை  பணியிடங்களுக்கு விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு அறநிலைத்துறையில் எக்ஸிகியூட்டிவ் பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு பெற அறிவிக்கை வெளியிடப்பட்டிருக்கு. மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்களின் எண்ணிக்கை 4 ஆகும். தமிழ்நாடு அறநிலைத்துறையில் பணியிடம் பெறும் எக்ஸிகியூட்டிவ் பணியாளர்களுக்கான மாதச்சம்பளமாக ரூபாய் 9,300 முதல் 34,800 வரை பெறலாம்.

சார்ந்த பதிவுகள்:

இந்திய ஏரோநாட்டிகிஸில் வேலைவாய்ப்பு பெற விண்ணப்பிக்க

டிஎன்பிஎஸ்சியின் அறநிலைத்துறை பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க டிசம்பர் 13 வரை விண்ணப்பிக்கலாம். இந்து அறநிலைத்துறை தேர்வானது 3 தாள்களை கொண்டது. பொதுஅறிவு, இந்து அறநிலைத்துறை, சட்டத்துறை மூன்று தாள்களில் ஒரே நாளில் பொது அறிவு மற்றும் இரண்டாம் நாள் அடுத்த தாள்களையும் எழுதலாம். ஜனவரி20, 2018 ஆம் நாள் பொதுஅறிவு மற்றும் அறநிலைத்துறை தாள், இரண்டாம் நாள் சட்டத்துறை தாளுக்கான தேர்வு நடைபெறும்.

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கு விண்ணப்பிக்க ரூபாய் 150 செலுத்தி பதிவு கட்டணம் செலுத்தலாம். அத்துடன் விண்ணப்ப கட்டணமாக ரூபாய் 150 செலுத்த வேண்டும். விண்ணப்ப கட்டணம் செலுத்துவதிலிருந்து கட்டண சலுகையை எக்ஸ் ஆர்மி ஆஃபிஸர் மற்றும் மாற்றுதிறனாளிகள் பெறலாம். விண்ணப்ப கட்டணத்தை ஆன்லைன் மற்றும் வங்கி செலான் மூலம் செலுத்தலாம். விண்ணப்பிக்க நிர்ணயிக்கப்பட்டுள்ள வயது வரம்பு பொதுப் பிரிவினர் எனில் 30 மற்ற பிரிவினருக்கு 35 வயது வரை விண்ணப்பிக்கலாம்.

இந்திய அறநிலைத்துறையில் வேலை வாய்ப்பு பெற முக்கியமாக வணிகவியல், கலைத் துறை, அறிவியல், சட்டம் போன்ற துறைகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் . தேர்வு மையங்கள் சென்னை, மதுரை, திருச்சி, திருநெல்வேலியில் தேர்வு எழுதலாம். தேர்வு குறித்து மேலும் அறிய அதிகாரப்பூர்வ அறிவிக்கை இணைப்பை இணைத்துள்ளோம். அத்துடன் ஆன்லைனில் விண்ணப்பிக்க தளத்தையும் விண்ணப்பித்துள்ளோம். விருப்பமும் தகுதியும் உடையோர் விண்ணப்பிக்கலாம்.

சார்ந்த பதிவுகள்:

டிஎன்பிஎஸ்சியின் நூலக அலுவலர் பணிக்கு அறிவிக்கை வெளியீடு 

English summary
here article tell about tnpsc job notification for Hindu charity Endowment

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia