TNPSC: ரூ.1.14 லட்சம் ஊதியத்தில் தொல்லியல் துறை வேலை- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

தமிழக அரசின் தொல்லியல் துறையில் காலியாக உள்ள அதிகாரி பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக அரசின் தொல்லியல் துறையில் காலியாக உள்ள அதிகாரி பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

TNPSC: ரூ.1.14 லட்சம் ஊதியத்தில் தொல்லியல் துறை வேலை- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம். இப்பணியிடம் குறித்த முழு விபரங்களும் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

நிர்வாகம் : தொல்லியல் துறை

தேர்வு வாரியம் : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் (TNPSC)

காலிப் பணியிட விபரங்கள்:

காலிப் பணியிட விபரங்கள்:

டிஎன்பிஎஸ்சி தொல்பொருள் அதிகாரி பணிக்குத் பணிக்கு மொத்தம் 18 காலிப் பணியிடங்கள் உள்ளன. GT-4, BC-5, BC(M)-1, MBC/DC-4, SC-3. SC(A)-1 என்ற வகையில் இப்பணியிடங்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.

 

கல்வித்தகுதி:

கல்வித்தகுதி:

28.11.2019 தேதியின்படி கல்வித்தகுதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி, விண்ணப்பதாரர்கள் பண்டைய கால வரலாறு மற்றும் தொல்லியல் துறையில் முதுநிலைப் பட்டம், தொல்லியல் துறையில் முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அல்லது வரலாறு, இந்திய வரலாறு, தமிழ் உள்ளிட்ட துறையில் முதுநிலைப்பட்டமும், Epigraphy Archaeology பிரிவில் முதுநிலை பட்டயப்படிப்பும் படித்திருக்க வேண்டும். மேலும், டிகிரி அளவில் தமிழை ஒரு பாடமாகக் கொண்டிருப்பது அவசியம்.

வயது வரம்பு:-

வயது வரம்பு:-

டிஎன்பிஎஸ்சி தொல்லியல் அதிகாரி பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 30 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். அரசு விதிமுறைப்படி, மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும், முன்னாள் ராணுவத்தினர் 48 வயது வரையில் உள்ளவர்களும் விண்ணப்பிக்கலாம். எஸ்.சி, எஸ்டி உள்ளிட்ட அனைத்து பிரிவைச் சேர்ந்த ஆதரவற்ற விதவைகள் ஆகியோர்களுக்கு உச்ச வயதுவரம்பு இல்லை.

ஊதியம் : இப்பணியிடங்களுக்கு ரூ.36,200 முதல் ரூ.1,14,800 வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

விண்ணப்பிக்கும் முறை :

இப்பணியிடத்தில் சேர தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.tnpsc.gov.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் விண்ணப்பம் பெற்று, அதனை பூர்த்தி செய்து டிசம்பர் 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வுக் கட்டணம்:

தேர்வுக் கட்டணம்:

டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் ஒரு முறை பதிவுக்கட்டணமாக 150 ரூபாய் செலுத்த வேண்டும். தேர்வுக்கான தேர்வுக்கட்டணம் 100 ரூபாய் செலுத்த வேண்டும். எனவே, முதன் முதலாக டி.என்.பி.எஸ்.சி. தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்கள் 250 ரூபாய் செலுத்த வேண்டியிருக்கும். ஏற்கனவே பதிவு செய்த விண்ணப்பதாரர்கள் தேர்வுக்கட்டணம் 250 ரூபாய் மட்டும் செலுத்தினால் போதுமானது.

தேர்வுக்கட்டணம் செலுத்தும் முறை:

தேர்வுக்கட்டணம் செலுத்தும் முறை:

விண்ணப்பதாரர்கள், தேர்வுக்கட்டணத்தை ஆன்லைன் அல்லது நேரடி வங்கி மூலமாகச் செலுத்த வேண்டும். வங்கி டிடி மூலமாக தேர்வுக்கட்டணம் செலுத்த விரும்பும் விண்ணப்பதாரர்கள், ஆன்லைனில் தேர்வுக்கு விண்ணப்பித்த பிறகு, அடுத்த இரண்டு நாட்களுக்குள்ளாக தங்களுடைய தேர்வுக்கட்டணத்தை செலுத்த வேண்டும்.

முக்கிய நாட்கள்:-

முக்கிய நாட்கள்:-

  • TNPSC Archaeology Exam அறிவிப்பு வெளியான நாள் : 28 நவம்பர் 2019
  • TNPSC Archaeology Recruitment 2019 தேர்வுக்கு விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 27 டிசம்பர் 2019
  • ஆன்லைன் வழி விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி நாள் : 30 டிசம்பர் 2019
  • TNPSC Archaeology Exam தேர்வு நடைபெறும் நாள் : 29 பிப்ரவரி 2020
  • தேர்வு முறை:

    தேர்வு முறை:

    தொல்லியல் அதிகாரி பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். எழுத்துத்தேர்வு 2020-ஆம் ஆண்டு பிப்ரவரி 20 ஆம் தேதியன்று நடைபெறும். தாள் 1 தேர்வில் 300 மதிப்பெண்களும், தாள் II இல் 200 மதிப்பெண்களும் இருக்கும் வகையில், வினா அமைப்பு உள்ளது. SC, SC(A), ST, MBC/DC, BC, BCM பிரிவினர் இரண்டு தாள்களிலும் சேர்த்து அதாவது 300க்கு 150 மதிப்பெண்கள் பெற வேண்டும். மற்றவர்கள் 300க்கு 200 மதிப்பெண்கள் பெற வேண்டும்.

    அதிகாரப்பூர்வ அறிவிப்பு:

    அதிகாரப்பூர்வ அறிவிப்பு:

    இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் டிஎன்பிஎஸ்சி-யின் அதிகாரப்பூர்வ இணையதளத்தைக் காணலாம். அல்லது நேரடியாக அறிவிப்பு லிங்க்கை காண இங்கே கிளிக் செய்யவும்.

     

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
TNPSC Recruitment 2019 For 18 Archaeological Officer Posts, Apply Online
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+