தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. உதவி கணினி பொறியாளர் மற்றும் உதவி ஆய்வாளர் என மொத்தம் 60 பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பத் துறை
மேலாண்மை : தமிழக அரசு
மொத்த காலிப் பணியிடம் : 60
பணி மற்றும் காலிப் பணியிட விபரம் :
- உதவி கணினி பொறியாளர் : 36
- உதவி ஆய்வாளர் : 24
ஊதியம் : மாதம் ரூ.37,700 முதல் ரூ.1,19,500 வரையில்
கல்வித் தகுதி : பொறியியல் துறையில் கணினிஅறிவியல் மற்றும் பொறியியல், கணினி பொறியியல், தகவல் தொழில்நுட்பம், மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம், உள்ளிட்ட பிரிவுகளில் பிஇ அல்லது பி.டெக் முடித்தவர்கள், எம்சிஏ முடித்தவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.
வயது வரம்பு :
- 01.07.2019 தேதியின்படி 21 முதல் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
- பிசி, எம்பிசி பிரிவு விண்ணப்பதாரர்கள் 32-க்குள்ளும், எஸ்சி, எஸ்டி பிரிவு விண்ணப்பதாரர்கள் 35 வயத்திற்குள்ளும் இருக்க வேண்டும்.
தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
பதிவுக் கட்டணம் :
- ரூ.150. ஏற்கனவே, ஒரு முறை பதிவுக் கட்டணமாக ரூ.150 செலுத்தியவர்கள் மீண்டும் செலுத்த தேவையில்லை.
- தேர்வுக் கட்டணம் ரூ.200 செலுத்தினால் போதுமானது. கட்டணங்கள் வங்கியின் அட்டைகளைப் பயன்படுத்தியும், ஆன்லைன் மூலம் செலுத்தலாம்.
தேர்வு மையம் : சென்னை, மதுரை, திருச்சி, திருநெல்வேலி, கோவை, சேலம், தஞ்சாவூர், வேலூர், விழுப்புரம்.
விண்ணப்பிக்கும் முறை : www.tnpsc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 20.02.2019
கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி : 22.02.2019
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி : 07.04.2019
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://www.tnpsc.gov.in/Notifications/2019_05_Notifyn_Assistant_System_Engineer_Analyst.pdf என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












