தமிழக அரசில் சிவில் நீதிபதி பணி!

Posted By: Kani

தமிழக நீதித்துறையில் சிவில் நீதிமன்றங்களில் காலியாக உள்ள நீதிபதி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலி பணியிடங்கள்: 320

பணியின் பெயர்: சிவில் நீதிபதி

வயது வரம்பு: 22-40க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு

ஊதியம்: ரூ.5,200-20,200 + தர ஊதியம் 2,400/-

விண்ணப்பக் கட்டணம்: ரூ.500/-

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசித் தேதி: 07.05.2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய இந்த லிங்கை கிளிக் செய்து பார்த்து தெரிந்துகொள்ளவும்.

ஆங்கில வடிவில் முழுமையான தகவல் பெற இதை கிளிக் செய்யவும்.

1.அதிகாரப்பூர்வ தளம்:

அதிகாரப்பூர்வ தளத்தில் பணிக்கான தகவலை பெறலாம். அதிகாரப்பூர்வ தளத்திற்கான லிங்க்

2. அறிவிப்பு லிங்க்:

முகப்பு பக்கத்தில் உள்ள 'நோட்டிபிகேஷன்' என்ற லிங்கை கிளிக் செய்வதன் மூலம் முழுமையான விவரங்கள் அறிய முடியும்.

3. கிளிக் ஒன் டைம் ரிஜிஸ்ட்ரேஷன்:

அப்பளை ஆன் லைன் என்பதை கிளிக் செய்த உடன் தோன்றும் பக்கத்தில் தோன்றும் கிளிக் ஒன் டைம் ரிஜிஸ்ட்ரேஷன் என்ற பட்டனை கிளிக் செய்யவும். முன்னதாக ஒன் டைம் ரிஜிஸ்ட்ரேஷன் யூசர் நேம், பாஸ்வேர்ட் இருப்பின் மீண்டும் பதிவு செய்ய தேவையில்லை. 

4. ஒன் டைம் ரிஜிஸ்ட்ரேஷன் இணைப்பு:

இதில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சரியாக பதில் அளித்து விண்ணப்பத்தை பூர்த்தி செய்யவும்.

5.விதிமுறைகள்:

இதில் குறிப்பிட்டுள்ள உறுதிமொழிகளை படித்து பார்க்கவும்.

5. உறுதி மொழி:

இறுதியாக மேற்கூறிய உறுதி மொழியை ஏற்றுக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ள இந்தப் பகுதியை கிளிக் செய்து சமர்பிக்கவும்.

7. வெரிபிகேஷன்:

விண்ணப்பத்தை சப்மிட் செய்யும் முன் இதில் கொடுக்கப்பட்டுள்ள வெரிபிகேஷன் எண்ணை கொடுக்க மறக்காதீர்கள்.  

8. பதிவு செய்யும் முறை:

விண்ணப்பத்தில் இறுதியாக கொடுக்கப்பட்டுள்ள சேமி என்பதை கிளிக் செய்யவும்.

9. ஆன்லைன் விண்ணப்ப லிங்க்:

இந்தப்பகுதியில் கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து விண்ணப்பிக்கவும்.

10. அப்ளை:

இந்த பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள அப்ளை என்ற லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

11. ஆன்லைன் லாக் இன் லிங்க்:

இந்தப்பகுதியை கிளிக் செய்து முன்னதாக பெறப்பட்ட ஒன் டைம் பாஸ்வேர்டை கொடுத்து விண்ணப்பிக்கலாம்.

12.வெரிபிகேஷன்:

பாஸ்வேர்ட் கொடுத்து சப்மிட் செய்யும் முன் இதில் கொடுக்கப்பட்டுள்ள வெரிபிகேஷன் எண்ணை கொடுக்க மறக்காதீர்கள்.

13. விண்ணப்பம்:

இந்த சப்மிட் பட்டனை கிளிக் செய்து விண்ணப்பிக்கவும். விண்ணப்பத்தில் கேட்கப்பட்டுள்ள கேள்விகளுக்கு சரியான முறையில் பதில் அளித்து இறுதியாக கொடுக்கப்பட்டுள்ள சப்மிட் பட்டனை கிளிக் செய்வதன் மூலம் வெற்றிகரமாக விண்ணப்பத்தை சமர்பிக்க முடியும்.

English summary
TNPSC recruitment 2018: Apply online 320 Civil Judge posts

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia