டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கான கேள்வி பதில்கள்

Posted By:

டிஎன்பிஎஸ்சி என்பது போட்டி தேர்வுக்கு படித்து கொண்டிருக்கும் அனைவருக்கும் தெரியும் . லட்சக்கனக்கானோர் எழுது குரூப் 4 தேர்வுக்கும் 4 லட்சம் பேர் எழுதும் குரூப் 2 தேர்வுக்கும் உள்ள வேறுபாடு என்னவெனில் தரம் அதாவது குரூப் 2 தேர்வானது பெரிய தாசில்தார், முன்சிபால்டி கவுன்சில் பிரிவை அடங்கியது. குரூப் 4 பில் கலெகடர் கிளார்க் பிரிவை சேர்ந்தது ஆகும்.

தேர்வுகளுக்கு இடையேயுள்ள வேறுபாடுகள் போல் படிப்பதிலும் மெனகெடல் இருக்க வேண்டும். டிஎன்பிஎஸ்சி கட் ஆப்பில் முக்கியத்துவம் பெற வேண்டும்.

1 சிவில் சர்வீஸின் தந்தை யார்?

1. காரன் வாலிஸ்
2. ராபர்ட் கிளைவ்
3. வாரன் ஹேஸ்டிங்கஸ்
விடை: 1 காரன் வாலிஸ்
விளக்கம் :
காரன்வாலிஸ் சிவில் சர்வீஸ் தேர்வை உருவாக்கியவர், அவரை சிவில் சர்வீஸின் தந்தை என்று அழைக்கின்றோம்.
சிவில் சர்வீஸ் பணியாளருக்கான சம்பளம் உயர்த்தினார். நீதித்துறையினை இந்தியாவில் உருவாக்கினார்.

2 இந்தியாவில் அடிப்படை கடமைகள் எந்த சட்டத்தின்படி கொண்டு வரப்பட்டது

1.  சட்டவிதி 51-ஏ
2. சட்டவிதி- 16
3. சட்டவிதி 17- 21
விடை: சட்டவிதி 51-ஏ
விளக்கம் :
42வது சட்டத்திருத்ததின் படி 1976இன் 10 கடமைகள், ஸ்வரன்சிங் கமிட்டியின்படி பரிந்திரைக்கப்பட்டது. 2002இல் 11 வது சட்டவிதிப்படி கல்வி அளிப்பது பெற்றோர் அல்லது பாதுகாவலரின் அடிப்படை கடமை ஆகும்.

3. தேர்தல் சீர்திருத்தம் கமிட்டியான சேஷன் கமிட்டி இந்தியாவில் எப்பொழுது அறிமுகப்படுத்தப்பட்டது?

1 1993
2 1995
3 1997
விடை: 1993
விளக்கம் :
இந்தியாய்ல் டி.என்.சேஷன் கமிட்டி 1993இல் அறிமுகப்படுத்தப்பட்டது . 1993 இல் வாக்காளர் அடையாள அட்டை கொண்டு வரப்பட்டது.

4 இந்திய மனித உரிமைகள் ஆணையம் எப்பொழுது கொண்டு வரப்பட்டது ?

1. 1948, டிசம்பர் 10
2. 1993 அக்டோர் 12
3. 1964 மார்ச் 15
விடை: 2 1993 அக்டோர் 12
விளக்கம் :
இந்தியாவில் 1993இல் கொண்டு வரப்பட்ட மனித உரிமை கழகமானது 1 தலைவர் 4 உறுப்பினர்கள் கொண்டது. தலைவர் பொறுப்பிற்கு ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பதவி வகிப்பார். குற்றச்சாட்டின் பேரில் அறிக்கை சமர்பிக்கும், குடிமையில் நீதிமன்றங்களுக்கு அதிகாரம் பெற்றள்ளது.

5. ராஷ்டிரிய அவிஷ்கர் அபியான் திட்டத்தை தொடங்கியவர் யார்?

1. அப்துல்கலாம்
2.  சந்திர சேகர்
3. மயில் சாமி அண்ணாதுரை
விடை: 1 அப்துல்கலாம்
விளக்கம் :
ஏ.பி. ஜே . அப்துல்கலாம் தொடங்கி வைத்தார். பள்ளி மாணவர்களிடையே அறிவியல் ஆர்வம் ஊட்டுவதன் மூலம் மாணவர்களிடையே கண்டு பிடிப்பை உண்டாக்கி புதுமை படைக்க வேண்டுமென்றார்.

6. என்று உலக ஓசோன் தினம் என்று அனுசரிக்கப்படுகின்றது ?

1 செப்டம்பர் 16
2 செபடம்பர் 17
3 மார்ச் 15
விடை:1 செபடம்பர் 16
விளக்கம் :
சர்வதேச ஒசோன் தினம் செப்டம்பர் 16 ஆம் நாள் 1987 ஆம் ஆண்டில் மாண்ட்ரியல் ஒப்பந்தம் மூலம் ஓசோன் தினம் 1995 முதல் அனுசரிக்கப்பட்டு வருகின்றது. ஒவ்வொரு ஆண்டும் கேரியிங் பார் ஆல் லைப் அண்டர் தி சன் என்ற தலைப்பில் கருப்பொருள் பின்ப்பற்றப்படுகின்றது.

7. பண அளிப்பு என்றால் என்ன?

1ஒரு நாட்டின் பண மதிப்பானது தேவையை வைத்து தீர்மானிக்கப்படுகின்றது
2 ஒரு நாட்டின் பணமதிப்பு அந்நட்டில் நிலவும் விலை மட்டத்தையும் தீர்மானிக்கின்றது
3. ஒரு நாட்டின் பணமதிப்பு அந்நட்டில் நிலவும் விலை மட்டத்தையும் , வட்டி வீதத்தையும் தீர்மானிக்கின்றது

விடை: 3.ஒரு நாட்டின் பணமதிப்பு அந்நட்டில் நிலவும் விலை மட்டத்தையும் வட்டி வீதத்தையும் தீர்மானிக்கின்றது
விளக்கம் : ஒரு நாட்டின் பணமதிப்பு விலை மட்டத்தயும் விலை மட்டத்தையும் தீமானிக்கின்றது. பொதுவாக ஒரு நாட்டின் பண அளிப்பு அந்த நாட்டின் மைய வங்கியால் தீர்மானிக்கப்படுகின்றது. இந்தியாவில் ரிசர்வ் வங்கி பண அளிப்பை கட்டுப்படுத்துகின்றது.

 

8. நேர்முக வரி என்பது என்ன?

1 தனிநபர்கள் வருமானம், சொத்துக்கள் ஆகியவற்றின் மீது விதிக்கப்படும் வரிகள் நேர்முக வரிகளாகும்.
2 பண்டங்கள் மற்றும் பணிகள் மீது விதிக்கப்படும் வரிகள்
3 சேவைகளின் மீது விதிக்கப்படும் வரிகள் நேர்மறை வரியாகும்
விடை: 1 தனிநபர்கள் வருமானம், சொத்துக்கள் ஆகியவற்றின் மீது விதிக்கப்படும் வரிகள் நேர்முக வரிகளாகும்.
விளக்கம் : தனி நபர்களின் வருமானம் மற்றும் சொத்துக்களைப் போல் வருமான வரி, சொத்து வரி, நிறுவன வரி , அன்பளிப்பு வரி, பண்ணை வரி, செலவு வரிகள் அதனில் அடங்கும்.

9. இந்திய இரும்பு ஆணையம் எப்பொழுது ஆரம்பிக்கப்பட்டது ?

1 1975
2 1965
3 1973
விடை: 1973
விளக்கம்
: இரும்பு எ ஃகு தொழில் மற்ற அனைத்து தொழில்களின் முன்னேற்றத்திற்கு அடிப்படையாக அமைந்தது இதனை தாய் தொழில் என்றும் அழைப்பார்கள்.

10.பொருளாதாரத்திற்காக நோபல் பரிசு பெற்ற இந்தியர்?

1 அமர்த்தியா சென்
2 சந்திர சேகர்
3 ஹர்கோபிந்த கொரானா
விடை: 1. அமர்த்தியா சென்
விளக்கம் :
நோபல் பரிசு பெற்ற ஆறாவது இந்தியா அமர்த்தியாசென் இவ ர் வங்காளத்தில் சாந்திகேதனில் பிறந்தார. இவர் தனது நான்காவது வயதில் பஞ்சத்தை நேரில் அனுபவித்தார். தனது வறுமையும் வளர்ச்சியும் சம்மந்தமான ஆராய்ச்சிக்காக 1998 ஆம் ஆண்டில் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்றார்.

சார்ந்த  பதிவுகள்:

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கான கேள்வி பதில்கள் 

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கான கேள்வி பதில்கள் படிக்கவும்

English summary
Article tells about Tnpsc question bank for aspirants

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia