தமிழக அரசுத் துறையில் காலியாக உள்ள கணினி ஆய்வாளர் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். கணினி அறிவியல், பிஇ பட்டதாரிகள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம். தகுதியும், விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி)
மேலாண்மை : தமிழக அரசு
மொத்த காலிப் பணியிடங்கள் : 58
பணி மற்றும் காலிப் பணியிட விபரம்:-
- உதவி கணினி ஆய்வாளர் : 24
- உதவி கணினி பொறியாளர் : 34
கல்வித் தகுதி :-
- உதவி கணினி ஆய்வாளர் : எம்சிஏ, பிஇ, பி.டெக்
- உதவி கணினி பொறியாளர் : பிஇ, பி.டெக்
வயது வரம்பு : 21 முதல் 35 ஆண்டுக்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
முன் அனுபவம் : தேவை இல்லை
ஊதியம் : ரூ. 37,700 முதல் ரூ. 1,19,500 வரையில்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : http://www.tnpsc.gov.in/Notifications/2019_05_Notifyn_Assistant_System_Engineer_Analyst.pdf
விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக www.tnpsc.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம் : விண்ணப்பக் கட்டணம் ரூ. 150, தேர்வுக் கட்டணம் - ரூ. 200
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 20.02.2019
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறிய http://tnpscexams.in/ அல்லது http://www.tnpsc.gov.in/Notifications/2019_05_Notifyn_Assistant_System_Engineer_Analyst.pdf என்னும் லிங்குகளை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












