கூட்டுறவு சங்கங்களின் இளநிலை ஆய்வாளர் காலிப் பணியிடத்திற்கான எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றோருக்கு வரும் 17-ஆம் தேதியிலிருந்து சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற உள்ளது.

இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் இளநிலை ஆய்வாளர் பணியிடத்தில் 30 காலிப் பணியிடங்கள் உள்ளன. இதனை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்ற 70 பேர் சான்றிதழ் சரிபார்ப்புக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சான்றிதழ் சரிபார்ப்பு வரும் ஜூன் 17 முதல் 24-ஆம் தேதி வரையில் நடைபெற உள்ளது.
இதேபோன்று கருவூல மற்றும் கணக்குத் துறையின் அலுவலர் பதவி (4), தொழில் மற்றும் வணிகத் துறைக்கான இரசாயனர் பதவி (2), சீர்திருத்தப் பள்ளிகள் மற்றும் விழிப்புப்பணி நிறுவனங்களுக்கான உதவி கண்காணிப்பாளர் பதவி (4) ஆகியவற்றுக்கான சான்றிதழ் சரிபார்ப்பும் வரும் 17-இல் தொடங்கி 24-இல் நிறைவடையவுள்ளதாகத் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications












