TNPSC Veterinary Assistant Surgeon Recruitment 2022:கால்நடை பராமரிப்பு பணியில் ரூ.2,05,700 ஊதியத்தில் வேலை...!

கால்நடை உதவி மருத்துவர் வேலை அறிவிப்பு

தமிழகத்தில் காலியாக உள்ள கால்நடை உதவி மருத்துவர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பை, நவ.,18 ஆம் தேதி தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.

731 கால்நடை உதவி மருத்துவர் பணியிடங்களுக்குத் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிர்வாகம் : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியம் (TNPSC)

மேலாண்மை : மாநில அரசு

காலிப்பணியிடம் எண்ணிக்கை: 731(முன்கொணர்வு பணியிடங்கள் 30 உட்பட)

கால்நடை பராமரிப்பு பணிகளில் வேலைவாய்ப்பு அறிவிப்பு…!

பணி விவரம்

· கால்நடை உதவி மருத்துவர் (Veterinary Assistant Surgeon )

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பிக்கும் கடைசி தேதி: 17.12.2022

கல்வி தகுதி

· B.V.Sc., பட்டம் (இப்போது B.V.Sc மற்றும் A.H என அறியப்படுகிறது) மற்றும் SSLC அல்லது அதற்கு இணையான தேர்வில், தமிழ் மொழி படித்து இருக்க வேண்டும் என்பது கட்டாயம் ஆகும்

ஊதியம்

நிலை 22 இன் படி, குறைந்தபட்சம் ரூ.56,100 முதல் அதிகபட்சம் ரூ.2,05,700 வரை மாத ஊதியம் என்ற முறையில் வழங்கப்படும்.

வயது வரம்பு

விண்ணப்பிக்க விரும்புவோர் வயது 01.07.2022 தேதியின் படி, அதிகபட்சம் 32க்குள் இருக்க வேண்டும். வயது தளர்வு, சலுகை உள்ளிட்ட இன்ன பிற விவரங்களுக்கு, கீழே கொடுக்கப்பட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு வாயிலாக அறிந்து கொள்ளவும்.

கால்நடை பராமரிப்பு பணிகளில் வேலைவாய்ப்பு அறிவிப்பு…!

தேர்வு கட்டணம்

Ø பதிவுக் கட்டணம் : ரூ.150/-

Ø தேர்வுக் கட்டணம் : ரூ 200/

தேர்வு முறை

Ø கணினி வழி மற்றும் நேர்காணல் அடிப்படையில், தகுதியானவர்கள் தெரிவு செய்யப்படுவர்.

Ø அறிவிப்பு வெளியான நவ.,18 முதல் டிச.17 வரை, இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

Ø அடுத்தாண்டு மார்ச் மாதத்தில், விண்ணப்பதாரர்களுக்கு கணினி வழி தேர்வு நடைபெறும்.

Ø தேர்வர்கள் ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். பிற வழி விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

தேர்வு நாள், நேரம், பாடம்

Ø தாள் -1

1. கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடை அறிவியல் (பட்டப்படிப்புத் தரம்)

15.03.2023 முற்பகல் 09.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை.

தாள் -2

பகுதி - அ

கட்டாய தமிழ்மொழி தகுதித் தேர்வு (10ம் வகுப்புத் தரம்)

பகுதி -ஆ

பொது அறிவு ( பட்டப்படிப்புத் தரம்)

15.03.2023 பிற்பகல் 02.30 மணி முதல் பிற்பகல் 05.30 வரை நடக்கும். மொத்தம் 570 மதிப்பெண்களுக்கு கேள்விகள் கேட்கப்படும்.

தாள் II-ல் பகுதி 'அ' வில் குறைந்தபட்ச மதிப்பெண் பெறாத தேர்வர்களின், தாள்-I மற்றும் தாள்-II பகுதி 'ஆ'வின் விடைத் தாள்கள் மதிப்பீடு செய்யப்படாது. அதாவது தமிழ் மொழி தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் ஆவார்.

தாள்-I மற்றும் தாள்-II பகுதி 'ஆ'வில் பெறும் மதிப்பெண்கள் மட்டும் தர நிர்ணயத்திற்கு கணக்கில் எடுத்து கொள்ளப்படும்.

விண்ணப்பிக்கும் முறை

Ø தேர்வர்கள் https://www.tnpsc.gov.in/English/Notification.aspx என்ற அதிகாரப்பூர்வ தளத்துக்கு சென்று, விண்ணப்பப் படிவத்தை பிழையின்றி, கோரப்பட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

Ø தேர்வர்கள் உரிய ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்ய வேண்டியது கட்டாயம்.

Ø கேட்கப்பெற்ற உரிய ஆவணங்கள் பதிவேற்றம் செய்யப்படவில்லை எனில், விண்ணப்பம் முழுமை பெற்றதாக கருதப்படாது.

விண்ணப்பம் தொடங்கப்பட்ட நாள்- 18.11.2022

விண்ணப்பிக்கக் கடைசி நாள் - 17.12.2022

விண்ணப்பம் திருத்தம் செய்ய இயலும் நாள்- 22.12.2022 - 24.12.2022

வயது வரம்பில் சலுகை உள்ளிட்ட முக்கிய நிபந்தனைகள் பற்றிய விரிவான விவரங்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளன.

கிளிக் பண்ணுங்க....

https://apply.tnpscexams.in/notification?app_id=UElZMDAwMDAwMQ==

https://www.tnpsc.gov.in/English/Notification.aspx

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
731 Veterinary Assistant Job Notification: The Tamil Nadu Government Staff Selection Board has released the notification for 731 Veterinary Assistant posts that are vacant across the state. Candidates applying for these jobs must know Tamil and the exam will be conducted in Tamil.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X