சுற்றுச்சூழல் அறிவியல் படிச்சிருந்தா?

எப்படியாவது அரசு வேலையில் சேர்ந்துடனும்னு நினைச்சு; ரா பகலா கண்விழிச்சு படிக்கும் தேர்வர்களுக்கு, அடுத்தடுத்த அறிவிப்புகளை வெளியிட்டு குஷிப்படுத்தி வருகிறது டி.என்.பி.எஸ்.சி., என அழைக்கப்படும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்.

அந்த வரிசையில், வனத்தொழில் பழகுநர் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது யூத்ஸ்...! போங்க பாஸ்...! தேர்வுக்கு தயாராகுங்க...! அடுத்தடுத்த அறிவிப்பு என்னனு சொல்லுறேன்.

சுற்றுச்சூழல் அறிவியல் படிச்சிருந்தா ஓர் வாய்ப்பு...!

நிர்வாகம்: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைம்(TNPSC)

மேலாண்மை: மாநில அரசு

காலியிடங்கள்: 10

பதவியின் பெயர் - வனத்தொழில் பழகுநர்( Forest Apprentice)

பணியின் பெயர்- தமிழ்நாடு வன சார்நிலை பணி

விண்ணப்பிக்க கடைசி தேதி : செப்டம்பர் 6

சம்பளம்: ரூ.37,700 - ரூ.1,38,500

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்

கல்வி தகுதி

அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி, பல்கலைக்கழகங்களில் வனவியல் அல்லது அதற்கு இணையான கல்வியில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்; அல்லது பொறியியல், இயற்பியல்,வேதியியல், தாவரவியல்,விலங்கியல், புள்ளியல், கால்நடை மருத்துவயியல், வனவிலங்கு உயிரியல்,விவசாயம், நிலவியல், தோட்டக்கலை, கடல்சார் உயிரியல் ஆகிய ஏதேனும் ஒரு படிப்புகளில், இளநிலை பட்டத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு முறை

· எழுத்து தேர்வு, உடற்தகுதி தேர்வு (Walking Test), வாய்மொழி தேர்வு ஆகிய மூன்று நிலைகளில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் இறுதி தகுதி பட்டியல் தயாரிக்கப்படும்.

· வனத்தொழில் பழகுநர் பதவிக்கான நியமனத்திற்கான சிறப்பு விதிகளின்படி, வனவியல் பாடத்தில் பட்டப்படிப்பு படித்துள்ள தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு தெரிவில் முழுமையான முன்னுரிமை வழங்கப்படும்.

· வனவியல் பாடத்தில் பட்டப்படிப்பு படித்துள்ள தகுதியுள்ள விண்ணப்பதாரர் யாரும் இல்லாத நிலையில் மட்டுமே, மீதமுள்ள மற்ற பட்டப்படிப்பு படித்துள்ள தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் பரிசீலிக்கப்படுவர்.

சுற்றுச்சூழல் அறிவியல் படிச்சிருந்தா ஓர் வாய்ப்பு...!

விண்ணப்ப கட்டணம்

· ஒரு முறை பதிவு கட்டணம் - ரூ.150/-

· தேர்வுக் கட்டணம் - ரூ.100/-

· ஆதிதிராவிடர்/ஆதிதிராவிடர் (அருந்ததியர்), பழங்குடியினர், நிர்ணயிக்கப்பட்ட குறைபாடுடைய மாற்றுத் திறனாளிகள்/ஆதரவற்ற விதவைகள் தேர்வுக் கட்டணம் செலுத்த தேவையில்லை.

· பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் நிர்ணயிக்கப்பட்ட காலத்துக்குள் சமர்ப்பிக்கவில்லை எனில், உரிய நடைமுறைகளுக்கு பின் நிராகரிக்கப்படும்.

· மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினருக்குரிய இட ஒதுக்கீடு வழங்கப்படவுள்ளன.

· சலுகையை கோரும் விண்ணப்பதாரர்கள் அதற்குரிய சான்றிதழ் ஆதாரங்களை இணையவழி விண்ணப்பத்துடன் இணைத்து பதிவேற்றம் செய்ய வேண்டும். பதிவேற்றம் செய்ய தவறினால் உரிய வழிமுறைகளை பின்பற்றி நிராகரிக்கப்படும்.

· ஏன்பா தமிழ் மொழியிலும் போதிய அறிவு இருக்கனும்பா.... தயவு செஞ்சு மறந்துடாதீங்க...!

குறிச்சு வைச்சுங்கோ...!

அறிவிக்கை நாள்: 08.08.2022

இணையவழி வாயிலாக விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க கடைசி நாள் : 06.09.2022

எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள்: 03.12.2022 (இரண்டு ஷிப்டுகளில் நடக்கும்)

எழுத்துத் தேர்வு மூன்று தாள்களை உள்ளடக்கியது. முதல் ஷிப்ட் காலை 9 மணி முதல் 12.30 மணி வரையிலும், 2வது ஷிப்ட் பிற்பகல் இரண்டு மணிமுதல் ஐந்து மணி வரையிலும் நடைபெறும்.

விண்ணப்பதாரர்கள் www.tnpsc.gov.in / www.tnpscexams.in ஆகிய தேர்வாணையத்தின் இணையதளங்கள் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். வயது வரம்பு, தளர்வு, பணி நடைமுறை உள்ளிட்ட அனைத்து விவரங்களும், அறிவிப்பில் விரிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதை ஒரு முறை மறக்காமல் படித்து பாருங்க...!

https://apply.tnpscexams.in/notification?app_id=UElZMDAwMDAwMQ==

chrome extension://efaidnbmnnnibpcajpcglclefindmkaj/https://tnpsc.gov.in/Document/tamil/20_2022_Group_VI_Forest App_Notfn_Tamil.pdf

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Forest Apprentice vacancies in Tamil Nadu Forest Department has been announced.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+