TNPSC Jailor Recruitment 2022: சிறை அலுவலருக்கு மாதம் ரூ.1.35 லட்சத்தில் பணி...!

டி.என்.பி.எஸ்.சி., என அழைக்கப்படும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், தமிழ்நாடு சிறை பணிகளில் அடங்கிய சிறைகள் மற்றும் சீர்திருத்தத் துறையின் சிறை அலுவலர் (ஆண்கள்), சிறை அலுவலர் (பெண்கள்) பதவிக்கான காலிப்பணியிடங்களுக்கு, கணினி வாயிலான தேர்வுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தகுதி, ஆர்வமுள்ளவர்கள் அக்., 13க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என, அறிவிப்பு

வெளியாகியுள்ளது.நிர்வாகம்: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC)

மேலாண்மை: மாநில அரசு

டி.என்.பி.எஸ்.சி., புதிய அறிவிப்பு..!

பதவிகள் விவரம்

• சிறை அலுவலர் (ஆண்கள்)

• சிறை அலுவலர் (பெண்கள்)

பணியின் பெயர்: தமிழ்நாடு சிறைப்பணிகள்

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பிக்க கடைசி தேதி - 13.10.2022

பணியிடங்கள் எண்ணிக்கை: 8

வயது வரம்பு

விண்ணப்பதாரர்கள், 32 வயது நிறைவடைந்திருக்கக்கூடாது.

ஆதி திராவிடர், ஆதரவற்ற விதவைகளுக்கு வயது வரம்பு கிடையாது.

ஊதியம்

ஊதியமாக, ரூ. 36,900 - ரூ.1,35,100 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

கல்வி தகுதி

சிறை அலுவலர் ஆண்கள் மற்றும் பெண்கள் பதவிகளுக்கு, 14.09.2022 படி விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள கல்வி தகுதியினை அல்லது அதற்கு இணையான படிப்பினை பல்கலைக்கழக மானியக் குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது பல்கலைக்கழக மானியக் குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்திடமிருந்து பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்

· ஒரு முறை பதிவு கட்டணம் - ரூ.150/-

· தேர்வுக் கட்டணம் - ரூ.200/-

விண்ணப்பிக்கும் முறை

இணையம் வழி விண்ணப்பத்தை, 13.10.2022 அன்று இரவு 1.59 மணி வரை திருத்த /விண்ணப்பிக்க இயலும். பின்னர், அச்சேவை நிறுத்தப்படும்.

இணையவழி விண்ணப்பத்தை, 18.10.2022 - நள்ளிரவு 12.01 மணி முதல் 20.10.2022 இரவு 11.59 மணி வரை திருத்தம் செய்யலாம்.

இணைய வழி விண்ணப்பத்துடன் இணைத்து பதிவேற்றம் செய்த ஆவணங்கள் சான்றிதழ்கள் மாற்ற/ பதிவேற்ற, மீள் பதிவேற்றம் செய்ய 10.12.2022 அன்று, இரவு 11.59 மணி வரை அனுமதிக்கப்படுவர். பின் அந்த சேவை நிறுத்தப்படும்.

ப்ளீஸ் நோட் இட்...!

• அறிவிக்கை நாள்: 14.09.2022

• இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் சமர்பிக்க கடைசி நாள் : 13.10.2022

• இணையவழி விண்ணப்பத்தை திருத்தம் செய்வதற்கான காலம்

• 18.10.2022 நள்ளிரவு 12.01 வரை

• 20.10.2022 இரவு 11.59 வரை

கணினி வழித்தேர்வு நடக்கும் நாள், நேரம்

• தாள் -1 பாடத்தாள் பட்டயப்படிப்புத்தரம்

• 22.12.2022 முற்பகல் 09.30 மணி முதல் பிற்பகல் 11.00 மணி வரை.

• தாள் -2 பகுதி -அ கட்டாய தமிழ்மொழி தகுதித் தேர்வு(10ம் வகுப்புத் தரம்) அல்லது பொது ஆங்கிலம் தகுதி மற்றும் மதிப்பீட்டுத் தேர்வு (கட்டாய தமிழ்மொழி தகுதித் தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு கோரும் நபர்கள் ) பகுதி -அ பொது அறிவு (பட்டப்படிப்புத் தரம்)

22.12.2022 பிற்பகல் 02.30 மணி முதல் பிற்பகல் 05.30 வரை

கவனமாக வாசிக்கவும்...!

• விண்ணப்பங்களை நிர்ணயிக்கப்பட்ட காலத்துக்குள் சமர்ப்பிக்க வேண்டும்

• வயது, கல்வித் தகுதி, பிரிவு போன்றவற்றில் உரிமை கோருபவர்கள், அதற்குரிய ஆவணங்களையும் இணைக்க வேண்டும்.

• விண்ணப்பதாரர்கள் www.tnpsc.gov.in ஆகிய தேர்வாணையத்தின் இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

டி.என்.பி.எஸ்.சி., புதிய அறிவிப்பு..!

ஒரு முறை கிளிக் பண்ணுங்க ப்ளீஸ்...!

https://www.tnpsc.gov.in/Tamil/Notification.aspx

பணி பற்றிய முழு விவரங்களையும் கவனமாக படிக்க வேண்டுமா? ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழியில்...

https://www.tnpsc.gov.in/Document/tamil/Jailor Tamil.pdf

https://tnpsc.gov.in/Document/english/Jailor Eng.pdf

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Jail Officer Jobs: Tamil Nadu Public Service Commission known as TNPSC has announced to apply for Jail Officer (Male) and Jail Officer (Female) Vacancies.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+