TNPSC Group I 2020: ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை! டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

தமிழக அரசுத் துறையில் காலியாக உள்ள உதவி ஆணையர், மாவட்ட அதிகாரி, உதவி இயக்குநர் உள்ளிட்ட 69 பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) சார்பில் வெளியிடப்

தமிழக அரசுத் துறையில் காலியாக உள்ள உதவி ஆணையர், மாவட்ட அதிகாரி, உதவி இயக்குநர், துணை பதிவாளர் உள்ளிட்ட 69 பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.

TNPSC Group I 2020: ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை! டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் 2020 பிப்ரவரி 19ம் தேதிக்குள் விண்ணப்பித்துப் பயனடையலாம். இப்பணியிடத்திற்கான கல்வித் தகுதி, வயது வரம்பு, ஊதியம் உள்ளிட்ட மேலும் விபரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

டிஎன்பிஎஸ்சி

டிஎன்பிஎஸ்சி

டிஎன்பிஎஸ்சி சார்பில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், Combined Civil Services -I Examination (Group-I Services) காலியாக உள்ள உதவி ஆணையாளர், மாவட்ட அதிகாரி, உதவி இயக்குநர், துணை பதிவாளர், துணை கண்காணிப்பாளர், துணை ஆட்சியாளர் ஆகிய பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

மொத்த காலிப் பணியிடங்கள்:-

மொத்த காலிப் பணியிடங்கள்:-

மொத்தம் 69 காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. உதவி ஆணையாளர் - 10, மாவட்ட அதிகாரி - 1, உதவி இயக்குநர் - 7, துணை பதிவாளர் - 14, துணை கண்காணிப்பாளர் - 19, துணை ஆட்சியாளர் - 1 என ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

கல்வித்தகுதி:

கல்வித்தகுதி:

மேலே குறிப்பிடப்பட்டுள்ள பணியிடங்களுக்கு ஏற்ப கல்வித் தகுதி மாறுபடுகிறது. உதவி ஆணையர் பணியிடத்திற்கு வணிகவியல் அல்லது சட்டம் படித்தவர்கள், உதவி இயக்குர் பணிக்கு டிப்ளமோ துறையில் சமூகவியல் படித்தவர்கள், முதுகலைப் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். முழு விபரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காணவும்.

வயது வரம்பு:

வயது வரம்பு:

உதவி ஆணையாளர், மாவட்ட அதிகாரி, உதவி இயக்குநர், துணை பதிவாளர், துணை கண்காணிப்பாளர், துணை ஆட்சியாளர் உள்ளிட்ட அனைத்துப் பணியிடங்களுக்குமே ஆகிய பணியிடங்களுக்கும் 21 முதல் 37 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். எஸ்.சி, எஸ்.டி உள்ளிட்ட குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு அரசு விதிமுறைப்படி வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

ஊதியம்

ஊதியம்

மேற்குறிப்பிட்ட 69 பணிகளுக்குமே லெவல் 22ன் படி ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, டிஎன்பிஎஸ்சி மூலம் இப்பணியிடத்திற்குத் தேர்வு செய்யப்படுவோருக்கு மாதம் 56,000 ரூபாயிலிருந்து 1,77,500 ரூபாய் வரையில் ஊதியம் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.tnpsc.gov.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.

முக்கிய நாட்கள்

முக்கிய நாட்கள்

  • Combined Civil Services -I Examination (Group-I Services) பணி அறிவிப்பு வெளியான நாள் - 20.01.2020
  • விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 19.02.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
  • தேர்வுக் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி நாள் : 21.02.2020
  • தேர்வுகள் நடைபெறும் நாள் : 05.04.2020 உத்தேசமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
  • தேர்வு முறை:

    தேர்வு முறை:

    முதற்கட்ட தேர்வு, முதன்மை எழுத்துத் தேர்வு மற்றும் வாய்வழி தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இதில், முதன்மைத் தேர்வானது 05.04.2020 அன்று காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரையில் நடைபெறும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    தேர்வு பாடத்திட்டம்

    தேர்வு பாடத்திட்டம்

    மேற்கண்ட பணிகளுக்கு தாள் 1 தேர்வில் மொத்தம் 300 மதிப்பெண்களுக்குப் பட்டப்படிப்பு தொடர்பான கேள்விகள் மற்றும் திறனறிவு கேள்விகள் கேட்கப்படும். இதில் எஸ்.சி, எஸ்.சி (ஏ)இ எஸ்.டி, எம்பிசி உள்ளிட்ட பிரிவினர் குறைந்தது 90 மதிப்பெண்கள் பெற வேண்டும். இதர பிரிவினர் 120 மதிப்பெண்களுக்கு குறையாமல் பெற வேண்டும். அடுத்தகட்டமாக எழுத்துத்ம தேர்வு மூன்று தாள்களாக மொத்தம் 750 மதிப்பெண்களுக்கு நடைபெறும். நேர்காணல் தேர்வு 100 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும்.

    தேர்வுக்கட்டணம்

    தேர்வுக்கட்டணம்

    ஏற்கனவே, டிஎன்பிஎஸ்சி-யில் பதிவு செய்தவர்கள், தேர்வுக்கட்டணம் மட்டும் செலுத்தினால் போதும். அல்லது புதிதாக விண்ணப்பிப்போர் தேர்வுக்கட்டணமாக ரூ.150 செலுத்த வேண்டும். ஒரு முறை பதிவுக்கட்டணம் 150 ரூபாய் ஆகும். முதற்கட்ட தேர்வு கட்டணம் ரூ.100 மற்றும் முதன்மை எழுத்துத் தேர்வு கட்டணம் ரூ.200 செலுத்த வேண்டும். இக்கட்டணத்தை ஆன்லைன் அல்லது நேரடியாக வங்கியின் மூலமாகச் செலுத்தலாம்.

    மேலும் விபரங்களுக்கு

    மேலும் விபரங்களுக்கு

    TNPSC Official Notification 2020 அறிவிப்பு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் வெளியிடப்பட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சி-யின் Combined Civil Services -I Examination (Group-I Services) தேர்வு குறித்த மேலும் விபரங்களை அறிய விரும்புவோர் www.tnpsc.gov.in/ அல்லது http://tnpsc.gov.in/Notifications/2020_01_NOTIFYN_GR_I_SERVICES.pdf என்னும் லிங்க்கை கிளிக் செய்து காணலாம்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
TNPSC Group I notification 2020 Out: apply online for 69 Post at tnpsc.gov.in
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+