குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்றோருக்கான சான்றிதழ் சரிபார்ப்பானது வரும் டிசம்பர் 3ம் தேதி முதல் நடைபெறும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

குரூப்-4 பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான எழுத்துத்தேர்வு கடந்த பிப்ரவரி 11 ஆம் தேதியன்று நடைபெற்றது. இத்தேர்வெழுதிய விண்ணப்பதாரர்களின் மதிப்பெண் விவரம் ஜூலை 30 ஆம் தேதியன்று தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டது.
இதனைத்தொடர்ந்து, இத்தேர்வு தொடர்பான அசல் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு சென்னை பிராட்வே பேருந்து நிலையம் அருகேயுள்ள தேர்வாணைய அலுவலகத்தில் டிசம்பர் 3 முதல் நடைபெற உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு அழைக்கப்பட்டுள்ள விண்ணப்பதாரர்களின் தரவரிசை மற்றும் அழைப்புக் கடிதம் டிஎன்பிஎஸ்சி-யின் www.tnpsc.gov.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications












