டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் தட்டச்சர் பணியிடத்திற்கு தேர்ச்சி பெற்றோருக்கு சான்றிதழ் சரிபார்ப்பு வரும் ஜனவரி 21-ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, டிஎன்பிஎஸ்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பிரிவில் காலியாகவுள்ள தட்டச்சர் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வு கடந்த 2018 பிப்ரவரி 11ம் தேதி நடைபெற்றது. இந்த எழுத்துத் தேர்வுக்கான மதிப்பெண் விவரங்கள் கடந்த ஜூலையில் வெளியிடப்பட்டது.
அதில், தேர்ச்சி பெற்றோருக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு சென்னை பாரிமுனை அருகேயுள்ள தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் வரும் ஜனவரி 21ம் தேதி முதல் துவங்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications












