டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கான கேள்வி பதில்கள் படிக்கவும்

Posted By:

டிஎன்பிஎஸ்சி தேர்வு குரூப் 4 தேர்வு முடிந்துவிட்டத்து இன்னும் சில நாட்களில் குரூப் 2, மற்றும் குரூப் 1 தேர்வுகளுக்கான நோட்டிபிகேசன் வருவதற்கான அடுத்த வாய்ப்பு  வரவுள்ளது இந்த வாய்ப்பை பயன்படுத்தவும். இத்தேர்வை வெல்லவும்.

1. காளிபங்கன் எங்குள்ளது?

1 ராஜஸ்தான்,
2 குஜராத்
3 ஆலம்கீர்பூர்
விடை: 1 ராஜஸ்தான்,
விளக்கம் :
காளிபங்கன் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ளது. காளிபங்கன் சரஸ்வதி நதிக்கரையின் மீது அமைந்துள்ளது.இங்கு உழவு தொழில் செய்யப்பட்டது.

2. விநயபீடகம் குறித்து எழுதுக?

1 விநய பீடகம் புத்த சமய கருத்துக்களை கூறுவது
2 ஜெய்னிச கருத்துக்களை கொண்டது
3 சங்கால காலநூல்கள்
விடை: 1 விநய பீடகம் புத்த சமய கருத்துக்களை கூறுவது
விளக்கம் :
புத்த சமயகருத்துக்களிய கூறும் நூல்கள் திரிபீடங்கள் என அழைக்கப்படும். திரிபீடகங்கள் மூன்று நூல்கள் உள்ளன. விநய பீடகம் ஒழுக்கம், சுத்த பீடகம் தூய்மை, அபிதம்ம பீடகம் அறநெறி கருத்துக்கள் கூறும்.

3. சீக்கியர்களின் பத்தாவது குரு யார்?

1.குரு கோவிந்த் சிங்
2. தேஜ் பகதூர்
3. ஹரி கோவிந்த சிங்
விடை: 1குரு கோவிந்த் சிங்
விளக்கம்
: சீக்கியர்களின் பத்தாவது குரு மற்றும் கடைசி குரு, கால்சா என்ற அமைப்பினை உருவாக்கியவர்.
பாஞ்ச்பியர்கள் என்பவர் உருவாக்கப்பட்டனர்.

4. இந்திய தேசிய காங்கிரஸ் தோற்றுவிக்கப்பட்டப்பின் முதல் மாநாடு எங்கு நடைபெற்றது?

1கொல்கத்தா
2 பூனே
3 மும்பை

விடை: 3 மும்பை
விளக்கம்
: முதன் முதலில் பூனாவில் துவங்க இருந்த காங்கிரஸ் கூட்டம் மும்மையில் 1885 டிசம்பர்25 முதல் 31 வரை நடைபெறும்.டபிள்யு.சி.பானர்ஜி இதன் தலைவராக இருந்தார். 72 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். தாதாபாய் நொரோஜி, கே. டி. திலாங் போன்றோர் கலந்து கொண்டனர்.

 

5. லக்னோ உடன்படிக்கை 1916?

5 லக்னோ உடன்படிக்கை 1916

1 காங்கிரஸ் முஸ்லீம் லீக் இருவரும் இந்தியாவிற்கு டொமினியன் அந்தஸ்து பெற வேண்டிய அவசியத்தை உணர்ந்தார்கள் இவர்களுக்கு இடையே லக்னோவில் நடைபெற்ற உடன்படிக்கையே லக்னோ உடன்படிக்கை ஆகும்.

2 அரசியலமைப்பு உருவாக்க கொண்டு வரப்பட்டது. 

3 சுயராஜ்ஜிய கட்சி தொடங்க பேசப்பட்டது
விடை: 1 காங்கிரஸ் முஸ்லீம் லீக் இருவரும் இந்தியாவிற்கு டொமினியன் அந்தஸ்தஸ்து பெற வேண்டிய அவசியத்தை உணர்ந்தாரகள் காங்கிரஸ் முஸ்லீம் லீக் இருவரும் இந்தியாவிற்கு டொமினியன் அந்தஸ்து பெற வேண்டிய அவசியத்தை உணர்ந்தார்கள் இவர்களுக்கு இடையே லக்னோவில் நடைபெற்ற உடன்படிக்கையே லக்னோ உடன்படிக்கை ஆகும்.
விளக்கம் :
காங்கிரஸ் மற்றும் லீக் இருவரும் இந்தியாவிற்கு டொமியன் அந்தஸ்து பெற வேண்டிய அவசியத்தை உணர்ந்தர்கள். காங்கிரஸ் மற்றும் முஸ்லீம் லீக் இருவருக்குமிடையே நடைபெற்ற லக்னோ உடன்படிக்கை இது 1916 டிசம்பர், 29 ஆம் தேஹி ஏற்படுத்தப்பட்டது.

 

6. விலையில் ஏற்படும் மாற்றத்தினால் தேவையில் ஏற்படும் மாற்றத்தின் அளவினை குறிப்பது ?

1 தேவை பெருக்கம்
2 தேவை இடப்பெயர்ப்பு
3 தேவை நெகிழ்ச்சி

விடை:3 தேவை நெகிழ்ச்சி
விளக்கம்
: தேவை விதியானது விலை மாற்றத்தினால் தேவை மாற்றம் அடைகின்றது. விலை மாற்றத்தினால் தேவை மாற்றத்தை அளவுகளை குறிப்பிடவில்லை.
தேவை மாற்றத்தின் அளவுகளை கூறுவது தேவை நெகிழ்ச்சி ஆகும்.

 

7. ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா எனப் பெயர் மாற்றமடைந்த வங்கி எது ?

1 பஞ்சாப் நேசனல் வங்கி
2 நியூ பேங் ஆப் இந்தியா
3 இம்பிரியல் வங்கி
விடை: இம்பிரியல் வங்கி
விளக்கம் :
இம்பீரியல் பேங்க் ஆப் இந்தியா 1959இல் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா 1959இல் ஸ்டேட் பேங் ஆப் இந்தியா எனப் பெயர் மாற்றமடைந்தது . இதன் கிளைகள் நாட்டுடமையாக்கப்பட்டன

8. இலாப நோக்கமற்று செயல்படும் வங்கியினைப் பற்றி குறிப்பிடுக?

1. ஆந்திரா வங்கி
2.  கனரா வங்கி
3.  இந்திய ரிசர்வ் வங்கி
விடை: 3. இந்திய ரிசர்வ் வங்கி
விளக்கம்
: இந்திய ரிசர்வ் வங்கி பணத்தை அச்சடித்து வழங்க முற்றுரிமை பெற்றுள்ளது. வணிக வங்கிகளுக்கு அவ்வுரிமை இல்லை. இந்திய ரிசர்வ் வங்கி லாப நோக்கில் செயல்படாது இதன் நோக்கம் நாட்டின் பொருளாதார கொள்கைகளை வளப்படுத்துவதாகும்.

9. இந்திய மாணவர்கள் எண்ணிக்கை இந்நாட்டு மக்கள் தொகையைவிட அதிகம்

1 இங்கிலாந்து
2 பிரான்சு
3 மேற்கண்ட அனைத்தும்
விடை: 3 மேற்கண்ட அனைத்தும்
விளக்கம் :
ஜே.பி.ஜி திலக் அவர்களின் கூற்றுபடி இன்று இந்திய மாணவர்களின் எண்ணிக்கையானது இங்கிலாந்து , பிரான்சு, கனடா, நார்வே போன்ற நாடுகளின் மக்கள் தொகையைவிட அதிகம் ஆகும்.

10. சன்ஷாத் ஆதர்ஷ் கிராம் யோஜ்னா எப்பொழுது துவங்கப்பட்டது?

1.2014-2016
2 2016-2019
3 2017- 2020
விடை: 2016 -2019
விளக்கம்
: சன்ஷாத் ஆதர்ஷ் கிராம் யோஜ்னா 2016 இல் ஒரு கிராமம் மற்றும் 2019இல் இரு கிராமங்களையும் தேர்ந்தெடுத்து உள்கட்டமைப்பு மேம்பாடு நவீன வசதிகளுடன் கூடிய பள்ளிகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் அமைய இது உருவாக்கப்பட்டது .

சார்ந்த பதிவுகள் :

போட்டி தேர்வுக்கான பொது அறிவு கேள்வி பதில்கள் படியுங்க

English summary
Article tells about Tnpsc question practice for aspirants

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia