தமிழ்நாடு மாநில அரசில் 'குரூப் - 1' பதவியில் பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) தற்போது வெளியிட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கலாம். கூடுதல் தகவல்களைப் பெற apply.tnpscexams.in என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (Tamil Nadu Public Service Commission- TNPSC) என்பது தமிழக அரசுப் பணிக்குத் தேவையானவர்களை தகுந்த போட்டித் தேர்வுகள் வாயிலாகத் தேர்வு செய்ய ஏற்படுத்தப்பட்ட ஒரு அரசு சார்ந்த அமைப்பு ஆகும். இது நமது நாட்டிலேயே மாநில அளவில் உருவாக்கப்பட்ட முதல் தேர்வாணையம் ஆகும். 1929-ல் சென்னை மாகாண சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஒரு சட்டத்தின் மூலம் ஒரு தலைவர் மற்றும் இரண்டு உறுப்பினர்களை கொண்டு உருவாக்கப்பெற்றது. அப்பொழுது இதன் பெயர் The Madras Service Commission என்று இருந்தது.

மாநில மறுசீரமைப்புக்குப் பின் 1957-ல் இது மதராஸ் அரசுப் பணியாளர் தேர்வாணையம் (Madras Public Service Commission) என்று பெயர் மாற்றம் செய்யப்பெற்று, சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படத் தொடங்கியது. சென்னை மாநிலம் என்பது தமிழ்நாடு என மாற்றம் பெற்ற பிறகு இதுவும் "தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்" என்று மாற்றப்பட்டுவிட்டது.
தமிழக அரசால் ஏற்படுத்தப்பட்ட இத் தேர்வாணையம் ஒரு தலைவர், மற்றும் குறிப்பிட்ட அளவிலான உறுப்பினர்களைக் கொண்டு செயல்படுகிறது. இவர்களின் பணிவிதிகள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஒழுங்குமுறை சட்டம்,1954 கீழ் வரையறுக்கப்பட்டுள்ளன.
தற்போது டிஎன்பிஎஸ்சி-யால் குரூப்-1 காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது குரூப்-1 பிரிவில் சப் கலெக்டர் 16, போலீஸ் டி.எஸ்.பி., 23, வணிக வரி உதவி கமிஷனர் 14, கூட்டுறவு சங்க துணை பதிவாளர் 21, ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் 14. மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி 1, மாவட்ட தீயணைப்பு, மீட்பு அதிகாரி 1 என 90 இடங்கள் காலியாக உள்ளன.
டிஎன்பிஎஸ்சி குரூப்-1 பணியிடங்களுக்கான கல்வித்தகுதி: இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க பெரும்பாலான பதவிகளுக்கு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும் என்பது அவசியம்.
டிஎன்பிஎஸ்சி குரூப்-1 பணியிடங்களுக்கான வயது: 1.7.2024 -ம் தேதியின் அடிப்படையில் இந்தப் பணிக்கு விண்ணப்பிப்போர் 21 - 34 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகையும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்ச்சி முறை: டிஎன்பிஎஸ்சி குரூப்-1 பணியிடங்களுக்கு பிரிலிமினரி, மெயின் தேர்வு, நேர்முகத்தேர்வு என்ற அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: டிஎன்பிஎஸ்சி குரூப்-1 பணியிடங்களுக்கு ஆன்லைன் முறையில் மட்டும் விண்ணப்பங்களை அனுப்பவேண்டும்..
கட்டணம்: விண்ணப்பக் கட்டணமாக மெயின் எழுத்துத்தேர்வுக்கு ரூ. 200-ம். பிரிலிமினரி தேர்வுக்கு ரூ. 100-ம் செலுத்தவேண்டும்.
கடைசிநாள்: டிஎன்பிஎஸ்சி குரூப்-1 பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரும் 27.4.2024-ம் தேதிக்குள் அனுப்பவேண்டும்.
இணையதள முகவரி: கூடுதல் தகவல்களைப் பெற apply.tnpscexams.in என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.
டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் அதற்காகக் காத்திருந்த தேர்வர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Click it and Unblock the Notifications












