தமிழ்நாடு அரசு, நகர் ஊரமைப்புத் துறையில் காலியாக உள்ள வரைவாளர் பணியிடங்களை நிரப்பிடும் வகையில் நடைபெற்ற தேர்வில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி முதல் சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்யலாம் என டிஎன்பிஎஸ்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் நகர் ஊரமைப்புத் துறையில் காலியாக உள்ள வரைவாளர் (நிலை 3) பணியிடங்களை நிரப்பிடுவதற்கான தேர்வு நடைபெற்றது. இதில், தேர்ச்சியடைந்தவர்கள் வரும் 10-ஆம் தேதி முதல் 18-ஆம் தேதி வரையில் தங்களுடைய சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
இந்தச் சான்றுகளைத் தமிழக அரசின் இணையச் சேவை மையங்களின் வழியாக மட்டுமே பதிவேற்றம் செய்ய வேண்டும்.
மேலே குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள் சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்யாதவர்கள், வரைவாளர் பணிக்கான தெரிவு நடைமுறைகளில் ஆர்வமில்லை என அறியப்பட்டு அவர்கள் தேர்வு செய்யப்பட மாட்டார்கள். இவ்வாறு டிஎன்பிஎஸ்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications












