TNPSC Group 4 Certificate verification 2023: TNPSC குரூப் 4 சான்றிதழ்கள் பதிவேற்ற தெரியும்?

தமிழகத்தில், கடந்தாண்டு ஜூலை 24 ஆம் தேதி, குரூப் 4 எழுத்து தேர்வு நடைபெற்றது. தேர்வில், 18.5 லட்சம் பேர் கலந்து கொண்டனர்.

குரூப் 4 பதவிகளுக்கு எழுத்து தேர்வின் அடிப்படையில் மட்டுமே விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். எழுத்து தேர்வு முடிவுகளை கடந்த மார்ச் 25ஆம் தேதி வெளியானது.

இளநிலை உதவியாளர்/கிராம நிர்வாக உதவியாளர் (Junior Assistant/VAO), தட்டச்சர்(Typist) , சுருக்கெழுத்தர் (Steno Typist) ஆகிய பதவிகளுக்கு, இணைய வழி சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தேர்வானவர்கள் பட்டியலை டி.என்.பி.எஸ்.சி., எனப்படும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டு உள்ளது.

குரூப் 4 சான்றிதழ் பதிவேற்ற ரெடியா?

இளநிலை உதவியாளர்/கிராம நிர்வாக உதவியாளர் மற்றும் தட்டச்சர் பதவிகளில் அறிவிக்கப்பட்ட பணி இடங்களை விட, இரண்டு மடங்கு பேர் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சுருக்கெழுத்தர் (Steno Typist) தேர்வில் அறிவிக்கப்பட்ட பணி இடங்களை விட 2.5 சதவீதம் பேர் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் அனைவரும் விண்ணப்பத்தில் தெரிவித்த அனைத்து தகுதிகளுக்கான ஆதாரங்கள் அடங்கிய அசல் சான்றிதழ்களை (Original Certificates) ஸ்கேன்(Scan)செய்து, டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தால் நடத்தப்படும் இ-சேவை மையத்திற்கு சென்று அசல் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

சான்றிதழ் பதிவேற்றம் செய்யாத தேர்வர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்கு கட்டாயம் அனுமதிக்கப்பட மாட்டார்கள். விண்ணப்பதாரின் விண்ணப்பம் நிராகரிக்கப்படும் என்பதை மறக்காதீங்க..

அதிகாரப்பூர்வ அறிவிப்பின் படி, விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பத்தில் கோரியுள்ள தகுதிக்கான சான்றிதழ்கள் ஏதேனும் பதிவேற்றம் செய்யப்படாமல் விடுபட்டுப்போனால், சான்றிதழ் சரிபார்ப்புக்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

மேலும் அவர்களது விண்ணப்பம் நிராகரிக்கப்படும் என்றும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

அதிகாரப்பூர்வ அறிவிப்பின் படி, கல்வித்தகுதி மற்றும் தொழில்நுட்ப தகுதி சான்றிதழ்களை தேர்வாணைய அறிவிக்கை தேதியிலோ அல்லது அதற்கு முன்னரோ பெற்றிருக்க வேண்டும். கடந்தாண்டு குரூப் 4 தேர்வு வெளியான அறிவிக்கை தேதி 30.03.2022.

ஆதரவற்ற விதவை, முன்னாள் இராணுவத்தினர், மாற்றுத்திறனாளி போன்ற சான்றிதழ்கள் தேர்வாணைய அறிவிக்கை தேதிக்குப் பின்னர் பெற்றிருக்கலாம்.

இருப்பினும், ஆதரவற்ற விதவை அல்லது முன்னாள் இராணுவத்தினர் அல்லது மாற்றுத்திறனாளி விண்ணப்பதாரர், தேர்வாணைய அறிவிக்கைத் தேதியன்று இவ்வகை உரிமைக்கோரும் (claim) தகுதி பெற்றிருக்க வேண்டும்.

குரூப் 4 அறிவிக்கை வெளியிட்ட தேதியன்று, உங்களிடம் PSTM சான்றிதழ் இருக்க வேண்டிய அவசியமில்லை. நீங்கள் உடனடியாக, டிஎன்பிஎஸ்சி இணைய தளத்திற்குச் சென்று, FORMS & DOWNLOADS Candidate related formats என்ற பக்கத்தில் PSTM படிவங்களை பதிவிறக்கம் செய்து, பள்ளி தலைமை ஆசிரியரிடம் கையொப்பம் வாங்கி கொள்ளலாம்.

கூடுதல் விவரங்களுக்கு கிளிக் ப்ளீஸ்...!

www.tnpsc.gov.in / www.tnpscexams.in

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Group 4 Online certificate verification 2023: According to the results of the written examination for Group-4 posts, candidates who have been admitted for online certificate verification can upload their original certificates from April 13 to May 5 through e-service centers, Tamil Nadu Government Staff Selection Commission has informed.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+