சாட்டர்ட் அக்கவுண்ட் பைனல் எக்ஸாம் பாஸா நீங்க?

மாநில அரசின் நிதி துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள தமிழ்நாடு மாநில கருவூலங்கள் மற்றும் கணக்குகள் பணிகளில், காலியாக உள்ள கணக்கு அலுவலர் நிலை-3 பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம் என, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

 

நிர்வாகம் : தமிழ்நாடு மாநில கருவூலங்கள் மற்றும் கணக்குகள் துறை

மேலாண்மை : மத்திய அரசு

பணி : கணக்கு அலுவலர்-3 (Accounts Officer-III)

மொத்த காலிப் பணியிடங்கள் : 23 (17 முன்கொணரப்பட்ட பணியிடங்கள் உட்பட)

டிரசரியில் ரூ.2 லட்சத்தில் வேலை 

கல்வித் தகுதி, தெரிவு நடைமுறை

கணக்கு அலுவலர் நிலை-3 பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் சி.ஏ., எனப்படும் இந்திய பட்டயக் கணக்காளர்கள் (சாட்டர்ட் அக்கவுண்ட்) நடத்திய இறுதித் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், தமிழ் மொழி அறிவையும் பெற்றிருக்க வேண்டும்.

 

டி.என்.பி.எஸ்.சி., வாயிலாக நடத்தப்படும் எழுத்து தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில், தகுதியான விண்ணப்பதாரர்கள் உத்தேசப்பட்டியல் தயாரிக்கப்படும்

காலிப்பணியிடங்கள், இடஒதுக்கீடு ஆகியவற்றின் அடிப்படையில், தரவரிசை யின்படி சான்றிதழ் சரிபார்ப்பு, கலந்தாய்வில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்படும்.

வயது வரம்பு

விண்ணப்பதாரர், 01.07.2022 படி, 32 வயது நிரம்பியவர், இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். ஆதிதிராவிடர், ஆதிதிராவிடர் அருந்ததியர்,, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட முஸ்லீம் வகுப்பினர், சீர்மரபினர், அனைத்து வகுப்புகளையும் சார்ந்த ஆதரவற்ற விதவைகள் ஆகிய பிரிவினருக்கு வயது வரம்பு ஏதும் இல்லை. எனினும், கூடுதல் விவரங்களுக்கு, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய அதிகாரப்பூர்வ அறிவிப்பாணையில் வாயிலாக தெரிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை

தகுதியான விண்ணப்பதாரர்கள், www.tnpsc.gov.in, www.tnpscexams.in ஆகிய தேர்வாணையத்தின் இணையதளங்கள் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

தேர்வு முறை

கணினி வழியாக மட்டுமே தேர்வு நடத்தப்படும். கொள்குறி வகை மற்றும் நேர்முக தேர்வு என, மொத்தம் 510 மதிப்பெண்கள் அடிப்படையில் இறுதிப்பட்டியல் தயாரிக்கப்படும்.

ஊதியம்

இந்தப் பதவிக்கு, அரசின் நிலை 23 ன் படி ரூ.56,900 முதல் ரூ.2,09,200 வரை ஊதியம் வழங்கப்படும்.

விண்ணப்ப கட்டணம்

தேர்வு கட்டணம் ரூ.200; நிரந்தர பதிவு கட்டணம் ரூ.150 என, நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

https://www.tnpsc.gov.in/english/notification.aspx
https://www.tnpsc.gov.in/

பதவிக்கான தகுதிகள், வயது வரம்பு தளர்வு, பணி காலம் ஆகியவை குறித்து, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் நேரில் அல்லது 1800 419 0958 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் வாயிலாக, அனைத்து வேலை நாட்களிலும் முற்பகல் 10:00 மணி முதல் பிற்பகல் 5:45 மணி வரை தொடர்பு கொள்ளலாம்.

ஒருமுறை பதிவு, இணையவழி விண்ணப்பம் குறித்த சந்தேகங்களுக்கு helpdesk@tnpscexams.in என்ற மின்னஞ்சல் முகவரியிலும், இதர சந்தேகங்களுக்கு grievance.tnpsc@tn.gov.in என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
A notification has been released for the job opportunity for those who have passed the Accounts Pile Exam, who will get a monthly salary of up to Rs.2 lakhs per month.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X