தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள பேராசிரியர், கட்டுப்பாட்டாளர், இயக்குநர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 23 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக் கழகம்
மேலாண்மை : தமிழக அரசு
மொத்த காலிப் பணியிடங்கள் : 23
பணி மற்றும் காலிப் பணியிடங்கள்
தேர்வு கட்டுப்பாட்டாளர் - 01
பேராசிரியர் - 04
ஊதியம் : மாதம் ரூ.1,44,200 முதல் ரூ.2,18,200 வரையில்
இணை பேராசிரியர் - 05
உதவி இயக்குநர் (Physical Education) - 01
ஊதியம் : மாதம் ரூ.1,31,400 முதல் ரூ.2,17,100 வரையில்
உதவிப் பேராசிரியர் - 11
உதவிப் பொறியாளர் (சிவில்) - 01
ஊதியம் : மாதம் ரூ. 57,700 முதல் ரூ.1,82,400 வரையில்
பணியிடம் : சென்னை
கல்வித் தகுதி : மேற்கண்ட பணியிடங்களுக்கு சம்மந்தப்பட்ட துறையில் முதுகலைப் பட்டம், முனைவர் பட்டம், பிஇ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்ப கட்டணம் : எஸ்சி, எஸ்டி, எஸ்சிஏ, மாற்றுத்திறனாளிகள் பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு ரூ.250,
மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கு ரூ.500 கட்டணமாகச் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.tnpesu.org என்னும் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி : Registrar, Tamil Nadu Physical Education and Sports University, Chennai 600127
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி : 24.02.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.tnpesu.org/appointment-25jan.html என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.