தமிழக அரசிற்கு உட்பட்ட இந்து அறக்கட்டளைத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் கோவை மருதமலை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் காலியாக உள்ள மருத்துவ அலுவலர், செவிலியர் மற்றும் பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 6 பணியிடங்கள் உள்ள நிலையில் இதற்கு ரூ.75 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உடையோர் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

மேலாண்மை : தமிழக அரசு
துறை : இந்து அறக்கட்டளைத் துறை (TNHRCE)
பணியிடம் : கோவை மாவட்டம், பேரூர் வட்டம், மருதமலை, அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்.
மொத்த காலிப் பணியிடம் : 06
பணி காலிப் பணியிடங்கள் :
- மருத்துவ அலுவலர் - 02
- செவிலியர் - 02
- பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் - 02
கல்வித் தகுதி :
- மருத்துவ அலுவலர் - MBBS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- செவிலியர் - DGNM
- பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் - 8-ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
ஊதியம் :
- மருத்துவ அலுவலர் - ரூ.75,000
- செவிலியர் - ரூ.14,000
- பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் - ரூ.6,000
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : கீழே இணைக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஒவ்வொரு பதவிக்கும் அந்தந்த பதவிக்குரிய கல்வி மற்றும் இதர தகுதி சான்றுகள் மற்றும் இதர விபரங்களுடன் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பம் அனுப்பப்படும் மேலுறையின் மீது கண்டிப்பாக பதவியின் பெயர் குறிப்பிட்டு அனுப்பப்பட வேண்டும்.
விண்ணப்பப் படிவம் பெற:
விண்ணப்பங்களை நேரிலோ அல்லது https://www.tnhrce.gov.in/ என்கிற இணையதள முகவரியின் மூலம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் பெயரில் உள்ள பக்கத்தில் விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
துணை ஆணையர் / செயல் அலுவலர், அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், மருதமலை, பேரூர் வட்டம், கோவை மாவட்டம் - 641046. தொலைபேசி எண். 0422-2422490.
குறிப்பு :
விண்ணப்பதாரர் இந்து மதத்தை சார்ந்தவராகவும், தமிழ்நாட்டைச் சார்ந்தவராகவும் இருக்க வேண்டும்.
நன்னடத்தை உடையவராக இருக்க வேண்டும். இதற்கு அரசிதழ் பதிவு பெற்ற அரசு உயரதிகாரியிடமிருந்து பெறப்பட்ட நன்னடத்தைச் சான்று பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 10.11.2021-ம் தேதி மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இப்பணியிடங்கள் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.tnhrce.gov.in/ அல்லது கீழே இணைக்கப்பட்டுள் அறிவிப்பினைக் காணவும்.


Click it and Unblock the Notifications












