தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை (TNHRCE) ஆனது திருச்சி மாவட்டம், அருள்மிகு தாயுமானசுவாமி திருக்கோவிலில் காலியாக உள்ள தட்டச்சர், தொழில்நுட்ப உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 13 பணியிடங்கள் உள்ள நிலையில் இதற்கு 10-வது தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. ரூ.65 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடத்திற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

மேலாண்மை : தமிழக அரசு
துறை : இந்து அறக்கட்டளைத் துறை (TNHRCE)
பணியிடம் : திருச்சி மாவட்டம், அருள்மிகு தாயுமானசுவாமி திருக்கோவில்
மொத்த காலிப் பணியிடங்கள் : 13
பணி மற்றும் காலிப் பணியிடங்கள் :
தட்டச்சர், கணினி இயக்குநர், தொழில்நுட்ப உதவியாளர், தூய்மை பணியாளர் என மொத்தம் 13 பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
கல்வித் தகுதி :
Typist - 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்று, தட்டச்சில் தேர்ச்சி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
Computer Operator - கணினி அறிவியல் பாடப்பிரிவில் தேர்ச்சி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
Technical Assistant - சிவில் பாடப்பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
Sweeper - தமிழில் நன்றாக எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு :
விண்ணப்பதாரர் 18 முதல் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
மேலும், அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
ஊதியம் : ரூ.10,000 முதல் ரூ.65,500 மாதம்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : கீழே இணைக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் மேற்குறிப்பிட்ட கோவிலில் அலுவலக வேலை நாட்களில் விண்ணப்பப் படிவம் பெற்று பூர்த்தி செய்து 29.12.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடங்கள் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பினைக் காணவும்.


Click it and Unblock the Notifications












