தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை (TNHRCE) ஆனது திருச்சி மாவட்டம், சமயபுரம், அருள்மிகு மாரியம்மன் திருக்கோவிலில் காலியாக உள்ள மருத்துவ அலுவலர், செவிலியர் மற்றும் பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 6 பணியிடங்கள் உள்ள நிலையில் இதற்கு ரூ.70 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

மேலாண்மை : தமிழக அரசு
துறை : இந்து அறக்கட்டளைத் துறை (TNHRCE)
பணியிடம் : திருச்சி சமயபுரம், அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில்
மொத்த காலிப் பணியிடங்கள் : 06
பணி மற்றும் காலிப் பணியிடங்கள் :
- மருத்துவ அலுவலர் - 2
- செவிலியர் - 2
- பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் - 2
கல்வித் தகுதி :
- மருத்துவ அலுவலர் - MBBS
- செவிலியர் - DGNM
- பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் - 8ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
ஊதியம் :
- மருத்துவ அலுவலர் - ரூ.75,000
- செவிலியர் - ரூ.14,000
- பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் - ரூ.6,000
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : கீழே இணைக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் 29.11.2021 தேதிக்குள் www.samayapurammariammantemple.org, https://hree.tn.gov.in அல்லது கீழே வழங்கப்பட்டுள்ள அறிவிப்புடன் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தினைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : இணை ஆணையர், செயல் அலுவலர், அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில், சமயபுரம், திருச்சிராபள்ளி மாவட்டம் - 621 112.
இப்பணியிடங்கள் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பினைக் காணவும்.


Click it and Unblock the Notifications












